CRIME
“அபராதம் கட்ட காசு இல்லைனா 200 தோப்புக் கரணம் போடு..!”பெண் ஊழியரின் தசை நார்களைக் கிழித்த கொடூர மேலாளர்.. 5 நாட்களுக்கு பிறகு பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்சூவில் உள்ள நிதி ஆலோசனை நிறுவனம் ஒன்றில், மேலாளர் கொடுத்த தினசரி விற்பனை இலக்கை எட்டத் தவறியதற்காக யாங் என்ற இளம் பெண் ஊழியருக்கு 200 தோப்புக் கரணங்கள் தண்டனையாக வழங்கப்பட்டதால், அவளது தசை நார்கள் கிழிந்து உயிருக்கு ஆபத்தான ‘ராப்டோமயோலிசிஸ்’ என்ற கொடூரப் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். ஒவ்வொரு தவறிய இலக்கிற்கும் 50 யுவான் அபராதம் செலுத்த வேண்டும் அல்லது 100 தோப்புக் கரணங்கள் போட வேண்டும் என்ற மேலாளர் ஜாங்கின் அநாகரிக அராஜக நிபந்தனைக்கு, ஏழைப் பெண்ணான யாங்கிடம் பணம் இல்லாததால் அவர் உடல் ரீதியான தண்டனையைத் தேர்ந்தெடுத்துள்ளார். 200 தோப்புக் கரணங்களையும் அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளில் போட்டு முடித்த அடுத்த கணமே அவளால் எழுந்து நிற்க முடியாமல் கால்களில் கடுமையான வலி ஏற்பட்டுத் தள்ளாடியுள்ளார்.
பணப் பற்றாக்குறையால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லாத யாங், ஐந்து நாட்களுக்குப் பிறகு தனது சிறுநீர் கரும் நிறமாக மாறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதுதான், தசை முறிவு ஏற்பட்டு இரத்தம் நச்சுத்தன்மையாக மாறிய அதிர்ச்சி உண்மை அம்பலமானது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும் அளவிற்கு அவரது கிரியேட்டின் கைனேஸ் அளவு 16,000 U/L ஆக அசுரத்தனமாக உயர்ந்திருந்ததால், மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சையளித்து ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து யாங் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, மருத்துவச் செலவு மற்றும் இழப்பீடாக ரூ.2.12 லட்சம் கோரியுள்ள நிலையில், சீன தொழிலாளர் சட்ட விதிகளின்படி ஊழியர்களை உடல் ரீதியாகத் தண்டிப்பது தடை செய்யப்பட்டுள்ளதால், அந்தத் துரோக மேலாளருக்கு எதிராகத் தற்போது தொழிலாளர் நல வாரியம் அனல் பறக்கும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.
