LATEST NEWS
“உடுத்திய துணியைத் தவிர எல்லாமே போச்சு..!” 9.30 மணிக்கு வந்த எமன்.. நேபாள வெள்ளத்தில் இருந்து தப்பிய பெண்ணின் நெஞ்சை உருக்கும் கண்ணீர் பேட்டி..!!!
நேபாளத்தில் திபெத்தின் திரிசூலி மற்றும் போதே கோஷி ஆறுகளில் ஏற்பட்ட அசுரத்தனமான திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி, மாபெரும் அதிசயமாய் உயிர் பிழைத்த தீபிகா என்ற பெண், “குடிப்பதற்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கூட இல்லை, உடுத்திய துணியைத் தவிர எங்களிடம் தற்போது எதுவுமே மிஞ்சவில்லை” என்று பேட்டியில் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். காலையில் அவர் வாசலில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த போது எவ்வித எச்சரிக்கையும் இன்றி 9.30 மணியளவில் அக்னிப் பிழம்பாய் சீறிப்பாய்ந்து வந்த வெள்ளத்தைக் கண்டு, உடனடியாகத் தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு மொட்டை மாடியில் தஞ்சமடைந்ததால் நல்வாய்ப்பாக அவர்கள் உயிர் தப்பியுள்ளனர். திபெத்-நேபாள எல்லையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் வெடித்த இந்த மெகா பேரழிவில் நுவாகோட் மற்றும் தாதிங் மாவட்டங்களின் விதுர் உள்ளிட்ட கிராமங்கள் முற்றிலும் சேறு மற்றும் களிமண்ணால் புதையுண்டு சாம்பலாகியுள்ளன.
இந்தக் கொடூரமான காட்டாற்று வெள்ளப் பெருக்கிற்கு இதுவரை 95-க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியுள்ளதுடன், தமிழக யாத்ரீகர்கள் உட்பட 105 இந்தியர்கள் மாயமாகி உள்ளதாக அதிர்ச்சிப் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. விதுர் கிராமத்தின் மொட்டை மாடிகளில் இருந்து பார்த்தால் ஒட்டுமொத்தப் பகுதியும் சாம்பல் நிறச் சேற்றுக் கடலாகக் காட்சியளிப்பதுடன், வீடுகள், கோயில்கள் மற்றும் ராட்சதப் பாறைகள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் நரகக் காட்சிகள் பார்ப்பவர்களின் இதயங்களைச் சுக்குநூறாக உடைப்பதாக உள்ளன. நேபாளத்தின் முக்கிய 6 நீர்மின் நிலையங்கள் மற்றும் சாலைகள் முற்றிலும் சேதமடைந்து ஒட்டுமொத்த எல்லையே ஸ்தம்பித்திருக்கும் வேளையில், தப்பியோட முடியாமல் உடைமைகளை இழந்து வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.
