LATEST NEWS
“இன்றிலிருந்து என்னுடைய முழு ஆதரவு சீமானுக்கு தான்” திடீர் டுவிஸ்ட் வைத்த நடிகை விஜயலட்சுமி.. என்ன நடந்தது..? பெரும் அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்..!!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நீண்ட காலமாகப் பாலியல் உள்ளிட்ட பல்வேறு புகார்களைத் தெரிவித்து வந்த நடிகை விஜயலட்சுமி, தற்போது திடீரெனத் தனது நிலைப்பாட்டை மாற்றி சீமானுக்கு முழு ஆதரவு அளிப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், “இன்றிலிருந்து என்னுடைய முழு ஆதரவும் நாம் தமிழர் கட்சிக்கும் சீமானுக்கும் தான்” என்று அவர் அறிவித்துள்ளார்.
தன்னை யாரும் பணம் கொடுத்து விலைக்கு வாங்க முடியாது என்று கூறியுள்ள விஜயலட்சுமி, ஒருவர் தவறை உணர்ந்து வாய்ப்புக் கேட்கும்போது அவர்களை வாழவிடுவதுதான் மனிதநேயம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தம்மைப் பற்றி மீண்டும் தவறாகவோ அல்லது கொச்சையாகவோ பேசுபவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இனி சீமானுக்காக உறுதியாகக் குரல் கொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தன்னைத் தொடர்ந்து விமர்சிப்பவர்களை எச்சரிக்கும் வகையில் இந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். குறிப்பாகத் தன்னை வம்புக்கு இழுப்பவர்களுக்குப் பதில் அளிக்கும் வகையிலேயே இனி நாம் தமிழர் கட்சிக்கும் சீமானுக்கும் தனது முழு ஆதரவையும் அளித்து களமிறங்கப்போவதாக அவர் அந்த வீடியோவில் விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.
