ஒரு நொடியிலே எல்லாம் மாறிப்போச்சு..! “என் மனைவியும் மகனையும்” என் கண்ணு முன்னாடி வெள்ளம் அடிச்சிட்டு போச்சு.. நேபாள வெள்ளத்தில் குடும்பத்தை இழந்து துடிக்கும் கணவனின் கதறல் – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒரு நொடியிலே எல்லாம் மாறிப்போச்சு..! “என் மனைவியும் மகனையும்” என் கண்ணு முன்னாடி வெள்ளம் அடிச்சிட்டு போச்சு.. நேபாள வெள்ளத்தில் குடும்பத்தை இழந்து துடிக்கும் கணவனின் கதறல்

Published

on

நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் அதைத் தொடர்ந்து பாய்ந்த பேரழிவு வெள்ளத்தில் 165-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளப்பெருக்கு, எந்தவொரு முன்அறிவிப்பும் இன்றி நொடிப் பொழுதில் பாய்ந்து வந்து ரசுவா, நுவாகோட் மற்றும் தாடிங் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களை முழுமையாகச் சேற்றில் மூழ்கடித்துள்ளது.

பனியாறு சரிந்து லெண்டே துணை நதியின் நீரோட்டத்தை அடைத்ததால், நீரானது கட்டுக்கடங்காமல் திரண்டு ராட்சத அலையாக மாறியுள்ளது. நேபாள-திபெத் எல்லையான ரசுவாகதியில் உள்ள திமுரே பகுதி வரை பாய்ந்த இந்த வெள்ள நீர், சில நிமிடங்களிலேயே கீழ்நோக்கிப் பாய்ந்து கரையோரம் அமைந்திருந்த குடியிருப்பு பகுதிகளை ஒட்டுமொத்தமாக அடித்துச் சென்று அழிவை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

வெள்ளநீர் பெரும்பாலான பகுதிகளில் வடிந்துவிட்ட போதிலும், நிலத்தில் படிந்துள்ள பல மீட்டர் உயரச் சேறும் வண்டல் மண்ணும் மீட்புப் பணிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அப்பகுதியிலுள்ள வீடுகளின் முதல் தளம் வரை சேறு மட்டுமே நிரம்பிக் காணப்படுகிறது. இடிபாடுகளுக்கு இடையேயும் தடிமனான மண்ணுக்கு அடியிலும் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான மக்களைக் கண்டறிய மீட்புக் குழுவினர் நேரத்துடன் போராடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட நுவாகோட் திரிசூலி சந்தையைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், திபெத் பகுதியில் அணை உடைந்து தண்ணீர் வருவதாக நிர்வாகம் எச்சரித்து, பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு ஓடுவதற்குள் வெள்ளம் கிராமங்களைச் சூழ்ந்துவிட்டது என்றார். நொடிப் பொழுதில் பாய்ந்த நீர் சுழலில் தனது மனைவியும் 18 வயது மகனும் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகிவிட்டதாக அவர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

Advertisement

இயற்கையின் சீற்றத்தால் வீடுகள், பாலங்கள், வணிக வளாகங்கள் மற்றும் சாலைகள் என அனைத்தும் உருத்தெரியாமல் சிதைந்துபோயுள்ளன. எஞ்சியிருக்கும் மனித உயிர்களைக் காப்பாற்றவும், மாயமானவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கவும் இராணுவமும் மீட்புப் படைகளும் இணைந்து அங்குத் தீவிரமான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in