“இப்படி ஒரு மகளை பெத்ததுக்கு வெட்கப்படுறேன்..!” என் மருமகனுக்கு தான் நியாயம் வேணும்..! கஷ்டப்பட்டு படிக்க வச்ச புருஷனை கழட்டிவிட்ட மனைவி..! காதலனுடன் ஓடிய போலிஸ் மகளுக்கு எதிராகத் தாயாரே எஸ்பி-யிடம் புகார்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இப்படி ஒரு மகளை பெத்ததுக்கு வெட்கப்படுறேன்..!” என் மருமகனுக்கு தான் நியாயம் வேணும்..! கஷ்டப்பட்டு படிக்க வச்ச புருஷனை கழட்டிவிட்ட மனைவி..! காதலனுடன் ஓடிய போலிஸ் மகளுக்கு எதிராகத் தாயாரே எஸ்பி-யிடம் புகார்..!!

Published

on

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டம் தல்மியாநகரைச் சேர்ந்த அஜய் குமார் சிங் என்பவருக்கும், அரச்சனா குமாரி என்பவருக்கும் கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு அரசு வேலை பெற வேண்டும் என்ற மனைவியின் ஆசையை நிறைவேற்ற, ஒரு தனியார் நிறுவனத்தில் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்த அஜய், தனது வருமானத்தில் மனைவியைப் படிக்க வைத்தார். உள்ளூர் பயிற்சி மையத்தில் சேர்த்துவிட்டதோடு, தேர்வு எழுத பல்வேறு நகரங்களுக்கும் அவரே நேரில் அழைத்துச் சென்றார். கணவனின் முயற்சிக்கும் மனைவியின் உழைப்பிற்கும் பலனாக அர்ச்சனாவிற்கு பீகார் காவல் துறையில் காவலர் பணி கிடைத்தது. தர்பங்காவில் பயிற்சிக்குப் பின் பேகூசரையில் அவர் பணியமர்த்தப்பட்டார்.

போலீஸ் சீருடை அணிந்து பணியில் சேர்ந்த பிறகு, அர்ச்சனா தனது கணவரிடம் பேசுவதைக் படிப்படியாகக் குறைத்துக் கொண்டார். இதற்கிடையில் விடுமுறையில் வீட்டிற்கு வந்தபோது, காதலன் விவேக் குமாருடன் அவர் வாட்ஸ்அப் தளத்தில் பேசிய உரையாடல்களை அஜய் கண்டுபிடித்தார். முன்னரே குடும்பத்தினரால் எச்சரிக்கப்பட்ட நிலையிலும் தொடர்பு தொடர்ந்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 2026 ஜூலை 3 அன்று அர்ச்சனா வீட்டிலிருந்த நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு காதலனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டதாகக் கணவர் அஜய் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

மனைவி காணாமல் போனதைத் தொடர்ந்து, அஜய் தல்மியாநகர் காவல் நிலையத்திலும் ரோஹ்தாஸ் எஸ்பி-யிடமும் புகார் அளித்தார். அர்ச்சனாவின் தாய் சகுந்தலா தேவியும் எஸ்பி அலுவலகத்திற்கு நேரில் சென்று, தன் மகளின் செயலுக்குக் கடும் எதிர்ப்பைப் தெரிவித்தார். “இப்படிப்பட்ட ஒரு மகளைப் பெற்றதற்கு வருந்துகிறேன்” என்று கூறிய அவர், மருமகனுக்கு ஆதரவாக நின்று காதலன் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். மேலும், திருமணத்திற்குப் பின் அர்ச்சனா இருமுறை கர்ப்பமாகி கலைந்தபோதிலும், கணவர் அஜய் தொடர்ந்து ஆதரவளித்தே வந்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in