LATEST NEWS
“குளிரில் நடுங்கி அம்மா.. அப்பா.. என அழுத பிஞ்சு உயிர்..!” 3 வயது குழந்தையைத் தனியாக விட்டுவிட்டு பெற்றோர் எடுத்த விபரீத முடிவு.. நெட்டிசன்களை கண்கலங்க வைத்த வீடியோ..!!
மேற்கு கோதாவரி மாவட்டத்தின் சிஞ்சினடா பாலத்தில், கடுமையான மன உளைச்சல் காரணமாகத் தம்பதியினர் தங்களது 3 வயதுக் குழந்தையைத் தனியாகத் தவிக்கவிட்டு கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. தணுகு மண்டலம் வேல்புரூ பகுதியைச் சேர்ந்த தோடா சாய் (29) மற்றும் ஷிரீஷா (28) ஆகிய இருவருமே இந்த விபரீத முடிவை எடுத்த தம்பதியினராவர். தங்களது 3 வயதுக் குழந்தையுடன் ஸ்கூட்டரில் பாலத்திற்கு வந்த அவர்கள், குழந்தையை வாகனத்திலேயே அமர வைத்துவிட்டு ஆற்றில் குதித்துள்ளனர்.
తీవ్ర విషాదం.. మూడేళ్ల పాపను వదిలి గోదావరిలో దూకిన దంపతులు
పశ్చిమ గోదావరి జిల్లాలోని చించినాడ బ్రిడ్జి వద్ద చోటు చేసుకున్న ఘటన
తణుకు మండలం వేల్పూరుకు చెందిన దొడ్డా సాయి(29), శిరీష(28) అనే దంపతులు తమ మూడేళ్ల పాపతో కలిసి బ్రిడ్జి వద్దకు వచ్చారు
పాపను స్కూటీ మీదే వదిలేసి..… pic.twitter.com/5o2Bji99Tm— PulseNewsBreaking (@pulsenewsbreak) August 27, 2026
நடுங்கும் குளிரில் தனியாக அமர்ந்தபடி “அம்மா.. அப்பா” என்று அழுதுகொண்டே அந்தப் பிஞ்சு குழந்தை தேடிய காட்சி, அங்கிருந்தவர்களைக் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த மீட்புப் படையினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள், ஆற்றில் குதித்த தம்பதியினரை மீட்கத் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். பெற்றோரின் இந்த விபரீத முடிவால் அநாதையாக நடுத்தெருவில் தவிக்கும் அந்தப் பாலகனின் நிலை ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
