CRIME
“வாழ்ந்தா என் மருமகளாத்தான் வாழணும்..! வேற எவனுக்கும் கிடைக்க விடமாட்டேன்..!” தந்தையின் கொடூரச் சதியால் பறிபோன இளம் பெண் உயிர்..!ஸ்ரேயா உபாத்யாய் கொலை வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்..!!
வாரணாசியில் எம்.எஸ்சி மாணவி ஸ்ரேயா உபாத்யாய் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி விவேக் சௌபேயின் தந்தை ராம் சஹாய் சௌபேயை ஆகஸ்ட் 27 அன்று காவல் துறையினர் கைது செய்தனர். ஜமுவா திராஹா ரயில்வே கேட் அருகே வைத்து அவரைப் பிடித்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராம் சஹாய் தன் மகன் விவேக்கிற்கு ஸ்ரேயாவை திருமணம் செய்து வைக்க விரும்பியதாகக் கூறப்படுகிறது.
ஸ்ரேயாவின் குடும்பத்தினர் இந்தத் திருமண வரனை நிராகரித்து, வேறு இடத்தில் அவருக்குத் திருமணம் நிச்சயித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ராம் சஹாய், “ஸ்ரேயா உயிரோடு இருந்தால் என் மருமகளாகத்தான் இருப்பாள்” என்று ஸ்ரேயாவின் குடும்பத்தினரை மிரட்டியதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோடிக்கணக்கிலான நில ஆசையைக் காட்டி விவேக்கை இந்தச் சதியில் ஈடுபடுத்தியதும் அவரது தந்தையே என ஸ்ரேயாவின் தாய்மாமன் குற்றம் சாட்டியுள்ளார்.
மருய் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரேயா உபாத்யாய் கடந்த ஆகஸ்ட் 18 அன்று திடீரென மாயமானார். இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் தேடிவந்த நிலையில், ஆகஸ்ட் 20 அன்று பச்சாவ் பஸ்சிம்பூரா பகுதியில் உள்ள ஒரு வெறிச்சோடிய இடத்தில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை புனீத் மிஸ்ரா மற்றும் ராம் சஹாய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள முதன்மை குற்றவாளி விவேக் சௌபேயைப் பிடிக்க வாரணாசி மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களில் காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
