CRIME
“பணம் கொட்டும்.. நீங்க பெரிய கோடீஸ்வரன் ஆகலாம்..!” சிறுமியை நிர்வாணமாக்கிப் பூஜை செய்ய போலி சாமியார் போட்ட பலே மாஸ்டர் பிளான்.. பலமாதங்களாக சீரழித்த கொடூரம்.. குலை நடுங்க வைக்கும் பிண்ணனி..!!
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் பகுதியில் “பணம் கொட்டும்” என்ற மூடநம்பிக்கையைத் தூண்டி, சிறுமி ஒருவரைச் சிறப்புப் பூஜைகள் என்ற பெயரில் கடத்திச் சென்று பல மாதங்களாகத் துன்புறுத்திய கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அனந்தபுரத்தைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவரின் பொருளாதாரச் சூழ்நிலையைப் பயன்படுத்திய ஒரு பெண், செல்வந்தராகலாம் என ஆசைவார்த்தை கூறி அவர்களின் மகளைச் சிறப்புப் பூஜைகளுக்கு அனுப்ப வற்புறுத்தியுள்ளார். இதனை நம்பிய பெற்றோர்கள் சிறுமியை அனுப்பிய நிலையில், ஒரு நபர் அச்சிறுமியை ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து கடப்பா மாவட்டத்திற்குச் சிறுமியைக் கடத்திச் சென்று, மேலும் சில நபர்களுடன் இணைந்து இக்குற்றச்செயல்களை அரங்கேற்றியுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைக் கண்காணித்து வந்த பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், போலீஸார் தலையிட்டுச் சிறுமியை மீட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாகக் கடப்பா மற்றும் அனந்தபுரம் காவல் நிலையங்களில் பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, தற்போது வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. சிறுமியைத் துன்புறுத்திய குற்றத்திற்காக நான்கு நபர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள போலீஸார், இதுபோன்ற ஆபத்தான மூடநம்பிக்கைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
