கலியுகத்தின் உச்சம்..! பிணத்திடமும் பேராசையா..? நேபாள வெள்ளத்தில் மிதந்த பெண் சடலத்தில் கம்மலைத் திருட முடியைப் பிடித்து இழுத்த கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் பகீர் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கலியுகத்தின் உச்சம்..! பிணத்திடமும் பேராசையா..? நேபாள வெள்ளத்தில் மிதந்த பெண் சடலத்தில் கம்மலைத் திருட முடியைப் பிடித்து இழுத்த கொடூரம்… நெஞ்சை பதறவைக்கும் பகீர் வீடியோ..!!

Published

on

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள மிக மோசமான திடீர் வெள்ளப் பெருக்கிற்கு இடையே, உயிரிழந்த பெண்ணின் உடலிலிருந்து நகையைத் திருடிய இரு நபர்களின் கொடூரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியுள்ளது. நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கால் 175-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 800-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இந்த இயற்கைப் பேரிடரின் கோர முகத்திற்கு மத்தியில், சேறும் சகதியுமாக ஒதுங்கிய ஒரு பெண்ணின் சடலத்திலிருந்து நகையைப் பறிக்கும் இந்த மனிதாபிமானமற்ற செயல் அரங்கேறியுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், வெள்ளக் கழிவுகளுக்கு இடையே பாதி உடல் தண்ணீரில் மூழ்கிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடக்கிறது. அப்போது அங்கு வரும் இரு நபர்களில் ஒருவர், மரக்கட்டை ஒன்றைப் பயன்படுத்தி அந்தச் சடலத்தைத் தன் அருகில் இழுக்கிறார். மற்றொரு நபர் அந்தப் பிணத்தின் முடியைப் பிடித்து இழுத்து, அவரது காதில் இருந்த ‘தங்கக் கம்மலை’ கொடூரமான முறையில் கழற்றித் திருடிச் செல்கிறார். சுற்றியிருந்த பொதுமக்கள் இதைப் தடுத்து நிறுத்தாமல், தங்களது மொபைல் போன்களில் வீடியோவாகப் பதிவு செய்து வேடிக்கை பார்த்துள்ளனர்.

Advertisement

இணையத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ள இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “கலியுகத்தின் உச்சம் இதுதான், மனிதநேயம் எப்போதோ இறந்துவிட்டது, மனிதர்களை விட விலங்குகளே மேலானவை” எனத் தங்களது கடுமையான கண்டனங்களையும் குமுறல்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர். பேரிடர் காலத்தில் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, சடலத்திடம் இப்படி அநாகரிகமாக நடந்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in