“இவள் என் காதலி..!” நீட் மாணவியின் இன்ஸ்டாகிராமை ஹேக் செய்த அத்தை மகன் சித்திரவதை… 19 வயது இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. கதறி துடிக்கும் தாய்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“இவள் என் காதலி..!” நீட் மாணவியின் இன்ஸ்டாகிராமை ஹேக் செய்த அத்தை மகன் சித்திரவதை… 19 வயது இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. கதறி துடிக்கும் தாய்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் வாடகை வீட்டில் வசித்து வந்த “குஷ்பு சிங்” என்ற 19 வயது நீட்தேர்வு மாணவி, தனது சொந்த அத்தையின் மகனால் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுத் தொடர்ச்சியாகக் கொடூரமான முறையில் பிளாக்மெயில் செய்யப்பட்ட நரக கொடுமையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட பதைபதைக்கும் விபரீதச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று காலையில் அவரது தாய் வீட்டில் பூஜை செய்து கொண்டிருந்த போது, குஷ்பு குளித்துவிட்டு உடை மாற்றுவதற்காகத் தனது அறைக்குச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது சகோதரன் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, குஷ்பு தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளார். வீட்டில் மரண ஓலமும் கதறலும் வெடித்த அந்த நொடில் கண்டெடுக்கப்பட்ட தற்கொலைக் கடிதத்தில் “அம்மா-அப்பா நீங்கள் அனைவரும் நன்றாக வாழுங்கள், நான் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் மிகவும் நேசிக்கிறேன்.. நான் தற்போது நிம்மதியாக என் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன்” என்று அவர் உருக்கமாக எழுதியுள்ளார்.

கண்ணீருடன் கதறிய குஷ்புவின் தாய், “என் மகளைத் திட்டமிட்டு பிளாக்மெயில் செய்து அவளது வாழ்க்கையையே அந்தச் சைக்கோ சீரழித்துவிட்டான்” என்று அவளது அத்தையின் மகன் மீது மாபெரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கடந்த சில மாதங்களாகக் குஷ்புவை மொபைல் போனில் கட்டாயப்படுத்திப் பேச வைத்ததுடன், அவளது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்து, குஷ்புவின் தோழர்களுக்கு “இவள் என் காதலி” என்று போலி மெசேஜ்களை அனுப்பி அநாகரிக அராஜகத்தில் அக்கும்பல் ஈடுபட்டுள்ளது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கான்பூர் லோக்கல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி, சைபர் க்ரைம் பிரிவின் உதவியுடன் தப்பியோடிய அந்தத் துரோக அத்தை மகனை நள்ளிரவிலேயே வளைத்துப் பிடிக்கப் பவர்ஃபுல் தனிப்படை அமைத்து அதிரடி ஆக்ஷன் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in