LATEST NEWS
“அப்படியே சர்க்கரை விலையையும் குறைங்க..!” பாஜக எம்பி எலுமிச்சை மந்திரத்தை ஓப்பனாகக் கிழித்த காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ்.. மரண மாஸ் சாட்டையடி..!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மழை குறுக்கிடாமல் இருக்க, எலுமிச்சை பழத்தை வெட்டி தான் மழையை தடுத்து நிறுத்தியதாக பாஜக எம்பி போஜ்ராஜ் நாக் கூறிய கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநில முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் கலந்து கொண்ட ‘மஹ்தாரி வந்தன்’ திட்ட நிகழ்ச்சியின் போது வானிலை மோசமாக இருந்ததால், நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெற வேண்டி தான் புத்ததேவர் மற்றும் மகாதேவரிடம் பிரார்த்தனை செய்து எலுமிச்சை பழத்தை வெட்டியதாக அவர் குறிப்பிட்டார். இந்தத் திட்டம் தற்போது எலுமிச்சை வெட்டியதால் வெற்றி பெற்றுவிட்டது என்றும், இனி மழை பெய்ய வேண்டுமென்றால் பெய்யட்டும் என்றும் அவர் பொதுவெளியில் பேசியுள்ளார்.
பாஜக எம்பியின் இந்த மூடநம்பிக்கையான கருத்துக்கு சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். எலுமிச்சை பழத்தை வெட்டினால் மழையை நிறுத்த முடியும் என்றால், நாட்டில் உயர்ந்து வரும் சர்க்கரை விலை, பணவீக்கம், மின்சார கட்டணம் மற்றும் எரிபொருள் விலைகளைக் குறைப்பதற்கும் பாஜக எம்பி ஒரு எலுமிச்சை பழத்தை வெட்ட வேண்டும் என்று தீபக் பைஜ் கிண்டலாகக் சாடியுள்ளார். மேலும், அறிவியல் பூர்வமற்ற இத்தகைய கருத்துக்கள் சமூகத்தில் தவறான தகவல்களைப் பரப்புவதாக நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
