LATEST NEWS
பகீர்..! சீனா – நேபாள எல்லையில் “அடுத்த 72 மணி நேரத்தில் உடையப்போகும் ராட்சத ஏரி” 2-ம் கட்ட வெள்ளப்பெருக்கு அபாயத்தால் சீன அரசு அவசர எச்சரிக்கை..!!!
சீனா – நேபாள எல்லையில் நிலச்சரிவு காரணமாக ஒரு பிரம்மாண்ட இயற்கை தடுப்பு ஏரி திடீரென உருவாகியுள்ளதாகச் சீன அரசு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. நேபாளத்தில் உள்ள Chhochen Khola மற்றும் Purepu Tsangpo ஆகிய ஆறுகள் ஒன்றிணையும் பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டு, நீர்வரத்து முற்றிலும் தடைப்பட்டு இந்த ஏரி உருவாகியுள்ளது.
தற்போது இந்தத் தடுப்பு ஏரியில் சுமார் 20 லட்சம் கன மீட்டர் அளவிற்குத் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும், அது ஏற்கனவே விளிம்பைத் தாண்டி நிரம்பி வழிவதாகவும் சீன நீர்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்த 72 மணி நேரத்திற்குள் மேலும் 30 லட்சம் கன மீட்டர் தண்ணீர் இந்த ஏரிக்குள் வர வாய்ப்புள்ளதால், இது உடைவதற்கான ஆபத்து மிகவும் அதிகமாக உள்ளது.
இந்த இயற்கை அணை உடைந்தால், எல்லையோரப் பகுதிகளில் இரண்டாம் கட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுப் பெரும் ஆபத்து உண்டாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் சீன அதிகாரிகள் செயற்கைக்கோள் மற்றும் கணினிக் கணிப்புகள் மூலம் ஏரியின் நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதுடன், மீட்புக் குழுவினரையும் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
