ஒரே மாதத்தில் முடிந்த காதல் பயணம்..! பெற்றோர் எதிர்ப்பால் வீட்டை விட்டு வெளியேறிய ஜோடி… கடும் மன உளைச்சலால் இளைஞர் எடுத்த அதிர்ச்சி முடிவு..! 30 நாட்களிலேயே நேர்ந்த கொடூரம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒரே மாதத்தில் முடிந்த காதல் பயணம்..! பெற்றோர் எதிர்ப்பால் வீட்டை விட்டு வெளியேறிய ஜோடி… கடும் மன உளைச்சலால் இளைஞர் எடுத்த அதிர்ச்சி முடிவு..! 30 நாட்களிலேயே நேர்ந்த கொடூரம்..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள நவாதியா கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான பைசான் என்ற வாலிபர், தனியார் மருத்துவமனையில் வார்டு பாயாகப் பணியாற்றி வந்தார். இவர் 22 வயதான ஜாஸ்மின் என்பவரைக் காதலித்து, குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு இருவரும் தங்களது குடும்பத்தினரை விட்டுப் பிரிந்து சிபி கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாடகை வீடு எடுத்து தனியாக வசித்து வந்தனர்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு உணவை முடித்துவிட்டு இருவரும் தூங்கச் சென்றுள்ளனர். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை ஜாஸ்மின் எழுந்து பார்த்தபோது, பைசான் துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்தத் திருமணம் பைசானின் குடும்பத்தினருக்குப் பிடிக்காததால் அவர்கள் அவருடன் பேசுவதை நிறுத்தி உறவைத் துண்டித்துக் கொண்டனர். இதனால் கடந்த சில நாட்களாக பைசான் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக அவரது மனைவி ஜாஸ்மின் தெரிவித்தார்.

Advertisement

ஆனால், பைசானின் உறவினர்களோ அவரது தலையில் இரத்தக்காயங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டி, இந்தச் சாவில் சந்தேகம் இருப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்ததுடன், சாட்சியங்களையும் வாக்குமூலங்களையும் சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடற்கூறாய்வு அறிக்கையின் முடிவிலேயே இது தற்கொலையா அல்லது கொலையா என்ற உண்மை தெரியவரும் என வட்டார அதிகாரி நிதின் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in