“நீ என்னதான் லவ் பண்ணனும்” பெண் காவலரை நட்டநடு ரோட்டில் வழிமறித்த கணினி ஆபரேட்டர்… எனக்கு விருப்பமில்ல என கதறியும் விடல.. அடுத்து நடந்த பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“நீ என்னதான் லவ் பண்ணனும்” பெண் காவலரை நட்டநடு ரோட்டில் வழிமறித்த கணினி ஆபரேட்டர்… எனக்கு விருப்பமில்ல என கதறியும் விடல.. அடுத்து நடந்த பகீர் சம்பவம்..!!

Published

on

பெண் காவலரைத் தொடர்ந்து பின்தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தி, மன உளைச்சலுக்கு ஆளாக்கிய கணினி ஆபரேட்டர் ராம்குமார் (32) என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தேன்மொழி (25) என்ற பெண் காவலர், பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் கணினிப் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளிப்பட்டு போலீஸ் குடியிருப்பில் வசித்து வரும் நிலையில், அங்கு கணினி ஆபரேட்டராகப் பணிபுரிந்த ராம்குமார் என்பவர் தேன்மொழியைத் தீவிரமாகக் காதலிப்பதாகக் கூறி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

பெண் காவலர் தேன்மொழி தனது விருப்பமின்மையைத் தெளிவாகத் தெரிவித்துவிட்ட போதிலும், ராம்குமார் தனது போக்கைக் மாற்றிக் கொள்ளவில்லை. அவர் தேன்மொழியின் அலைபேசிக்குத் தொடர்ந்து அழைத்து மனரீதியாகத் துன்புறுத்தியதோடு நில்லாமல், கடந்த சில நாட்களுக்கு முன்பு தேன்மொழி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகக் கூட்டத்திற்குத் தனது வாகனத்தில் சென்றபோது, காரில் பின்தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர், ஆள் நடமாட்டமில்லாத ஒரு தனிமையான இடத்தில் அவரை வழிமறித்து, தன்னைத்தான் காதலிக்க வேண்டும் என்று மிரட்டி வற்புறுத்தியுள்ளார்.

Advertisement

இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த தேன்மொழி, உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரணீத்திடம் நேரில் சென்று கண்ணீருடன் புகார் அளித்தார். புகாரை விசாரித்த எஸ்பியின் அதிரடி உத்தரவின் பேரில், பள்ளிப்பட்டு காவல் நிலைய போலீசார் ராம்குமார் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். காவல்துறையில் பணியாற்றும் ஒரு பெண் காவலருக்கே இந்த நிலை நேரிட்ட சம்பவம் அப்பகுதி காவலர்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in