CRIME
“ஒரே பேட்ச்… 20 பெண் போலீசார்..!” கோடீஸ்வர தொழிலதிபர் போல நடித்து 23 வாலிபர் செய்த மாபெரும் மோசடி.. திடுக்கிடும் பின்னணி..!!
டெல்லி காவல்துறையைச் சேர்ந்த பெண் காவலர்களையே குறிவைத்து, ஆடம்பர வாழ்க்கை முறையைக் காட்டி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த 23 வயது வாலிபர் விக்ராந்த் தோமரை டெல்லி போலீசார் புராடி பகுதியில் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலை உயர்ந்த கார்கள் மற்றும் சொகுசு வாழ்க்கை வாழும் வீடியோக்களைப் பதிவிட்டு, தன்னை ஒரு பெரிய கோடீஸ்வர தொழிலதிபர் போல விக்ராந்த் காட்டியுள்ளார். இதனை நம்பிய ஒரே பேட்ச்சை சேர்ந்த சுமார் 20 பெண் காவலர்களிடம், திருமண ஆசை காட்டி பழகியுள்ளார்.
அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு, பல காரணங்களைக் கூறி சுமார் 24 லட்சம் ரூபாய் வரை விக்ராந்த் பண மோசடி செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோசடிக்கு அவனுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த மற்றொரு பெண் காவலர் மூலமாகவே பிற பெண் காவலர்களின் விவரங்களை விக்ராந்த் திரட்டியது அம்பலமாகியுள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட பெண் காவலர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், டெல்லி சைபர் கிரைம் போலீசார் விக்ராந்த் தோமரை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
