FLASH: நேபாளத்தில் கொடூரம்… மண்ணைத் தோண்டத் தோண்ட அழுகிய நிலையில் எழும் சடலங்கள்… பலி எண்ணிக்கை 332-ஆக அதிகரிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

FLASH: நேபாளத்தில் கொடூரம்… மண்ணைத் தோண்டத் தோண்ட அழுகிய நிலையில் எழும் சடலங்கள்… பலி எண்ணிக்கை 332-ஆக அதிகரிப்பு..!!

Published

on

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 332-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் படையினர் தொடர்ந்து தீவிர பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், மண்ணில் புதைந்த இடங்களைத் தோண்டத் தோண்ட அழுகிய நிலையில் மனித உடல்கள் மீட்பது காண்போரைக் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும், 1,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால், உயிரிழப்பு மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

சொந்த உறவுகள், வாழ்ந்த இருப்பிடம் மற்றும் உழைத்துச் சேர்த்த உடைமைகள் என அனைத்தையும் இழந்து, வாழ வழியின்றி அம்மக்கள் நிராயுதபாணியாக நிற்பது உலகெங்கிலும் உள்ள மனிதநேய உள்ளங்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இயற்கையின் இந்த கொடூரத் தாண்டவத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நேபாள மக்களின் தற்போதைய துயர நிலை, செய்திகளைக் கேட்போரின் மனதைச் சுக்குநூறாக உடைக்கும் விதமாக அமைந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in