“2 எம்.எல்.ஏ இருந்தாலும் த.வெ.க-வில் மந்திரி பதவி” திமுக ஆட்சியில 4 MLA இருந்தும் ஏன் விசிகவுக்கு பங்கு தரல..? சட்டப்பேரவையில் கொந்தளித்த வன்னி அரசு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“2 எம்.எல்.ஏ இருந்தாலும் த.வெ.க-வில் மந்திரி பதவி” திமுக ஆட்சியில 4 MLA இருந்தும் ஏன் விசிகவுக்கு பங்கு தரல..? சட்டப்பேரவையில் கொந்தளித்த வன்னி அரசு..!!

Published

on

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு ஆற்றிய உரை, தலித் பிரதிநிதித்துவம் மற்றும் திராவிடக் கட்சிகளின் அணுகுமுறை குறித்த கடுமையான விவாதத்தை கிளப்பி அவையில் பெரும் அமளியை ஏற்படுத்தியுள்ளது.

பேரவையில் பேசிய அமைச்சர் வன்னி அரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதிலும், திமுக தனது ஆட்சிக் காலத்தில் அதிகாரத்திலும் அமைச்சரவையிலும் ஏன் பங்கு வழங்கவில்லை என்று மிகக் காரசாரமான கேள்விகளை முன்வைத்தார். தலித் தலைவர்களைப் பொதுத் தொகுதிகளில் போட்டியிட வைப்பதைப் பெருமையாகப் பேசுவது, அவர்களைச் சம உரிமையோடு பார்க்காமல் பரிதாபத்தின் அடிப்படையில் அணுகுவதையே காட்டுகிறது என்றும் அவர் திராவிடக் கட்சிகளைச் சாடினார்.

Advertisement

விசிகவுக்கு வெறும் 2 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே உள்ள நிலையிலும், தமிழக வெற்றிக் கழக அரசு அமைச்சரவையில் இடம் வழங்கி சமூக நீதியை நிலைநாட்டியுள்ளதாக அமைச்சர் வன்னி அரசு பெருமிதம் தெரிவித்தார். இதற்குத் தங்களது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்த எதிர்க்கட்சியான திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சரின் பேச்சை ‘சோஃபா மாடல்’ என்று கிண்டல் செய்து அவையில் முழக்கமிட்டதால் சில நிமிடங்கள் கடுமையான கூச்சல் குழப்பமும் காரசாரமான சூழலும் நிலவியது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in