இஸ்லாமியர்கள் உயிர் முக்கியம்னா ஏன் பதவியை விடல..? அன்னைக்கு கருணாநிதி என்ன சொன்னார் தெரியுமா..? திமுக-வின் கடந்த கால அரசியலை போட்டுடைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இஸ்லாமியர்கள் உயிர் முக்கியம்னா ஏன் பதவியை விடல..? அன்னைக்கு கருணாநிதி என்ன சொன்னார் தெரியுமா..? திமுக-வின் கடந்த கால அரசியலை போட்டுடைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!!

Published

on

சட்டப்பேரவையில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “பாஜக கூட்டணியில் திமுக இருந்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பியது அரசியல் வட்டாரத்தில் கடுமையான விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இஸ்லாமியர்களுக்கு திமுக தான் பல்வேறு நன்மைகளைச் செய்ததாக அக்கட்சியினர் கூறி வரும் நிலையில், கடந்த காலங்களில் பாஜக கூட்டணியில் திமுக அங்கம் வகித்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த சமயத்தில், ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஒரு சமூக இயக்கம் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி சொன்னதையும் அவர் தனது உரையில் நினைவு கூர்ந்துள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா கலவரத்தின் போது இஸ்லாமியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக அரசுக்கு இஸ்லாமியர்களின் உயிர் தான் முக்கியம் என்றால் அவர்கள் ஏன் உடனடியாக மத்திய அமைச்சரவையில் இருந்து விலகவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். இஸ்லாமியர்களின் நலனில் உண்மையான அக்கறை இருந்திருந்தால் அப்போதே திமுக விலகியிருக்கலாமே, ஏன் விலகவில்லை என்றும் அவர் சட்டப்பேரவையில் ஆவேசமாக வினவியுள்ளார்.

Advertisement

இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியைக் குறிவைத்து திமுக நாடகமாடுவதாகக் குற்றம் சாட்டிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பேச்சு, சட்டப்பேரவையில் திமுக மற்றும் தவெக உறுப்பினர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் கடந்த கால அரசியல் கூட்டணிகள் குறித்த இந்த விவாதம், தற்போதைய தமிழக அரசியல் தளத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in