அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் எத்தனை தலித் மக்கள்..? மதவாதிகள் செஞ்ச வேலை அது… சேகர்பாபுவை வெளுத்து வாங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் எத்தனை தலித் மக்கள்..? மதவாதிகள் செஞ்ச வேலை அது… சேகர்பாபுவை வெளுத்து வாங்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!..!!

Published

on

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டம் தவெக ஆட்சியில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் இதுவரை எத்தனை பேர் அர்ச்சகராகியுள்ளனர், குறிப்பாக எத்தனை தலித் மக்கள் அர்ச்சகராக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, இத்திட்டத்தின் மூலம் 32 பேர் அர்ச்சகராக்கப்பட்டதாகவும், சில நன்மனம் படைத்தவர்கள் இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை என்றும் விளக்கமளித்தார்.

முன்னாள் அமைச்சரின் இந்த விளக்கத்திற்குப் பதிலடி கொடுத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, 32 பேருக்கு நியமன ஆணை வழங்கிவிட்டு, சில மதவாதிகள் கொடுத்த அழுத்தம் காரணமாக அவர்களையே வழக்கு போட வைத்து திட்டத்தை முந்தைய அரசு நிறுத்திவிட்டதாகக் குற்றம் சாட்டினார். ஆனால், தற்போதைய தவெக அரசு பெரியார் வழியில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை உறுதியாகச் செயல்படுத்தும் என்று அவர் திட்டவட்டமாகப் பதிலளித்தார்.

Advertisement

இந்து சமய அறநிலையத்துறையின் இந்த முக்கியத் திட்டம் குறித்த விவாதம், சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே கடுமையான அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூகநீதி மற்றும் பெரியாரின் கொள்கைகளை முன்னிறுத்தி இத்திட்டத்தை தங்குதடையின்றி கொண்டு சேர்ப்பதே தங்களின் இலக்கு என தவெக அரசு இந்த விவாதத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in