BREAKING: சேகர்பாபு, எம்பி கலாநிதி வீராசாமி உள்ளிட்ட 10 பேர் மீது FIR … இன்று காலை 11 மணிக்கு ஆஜராக போலீஸ் அதிரடி சம்மன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: சேகர்பாபு, எம்பி கலாநிதி வீராசாமி உள்ளிட்ட 10 பேர் மீது FIR … இன்று காலை 11 மணிக்கு ஆஜராக போலீஸ் அதிரடி சம்மன்..!!

Published

on

முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டபோது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, திமுக எம்பி கலாநிதி வீராசாமி உள்ளிட்டோருக்கு வேப்பேரி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அக்டோபர் 26-ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக, இன்று காலை 11 மணிக்கு வேப்பேரி காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்றதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு திரண்ட முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள், காவல்துறையினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், கைதானவரைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு மருத்துவமனை மற்றும் நீதிமன்ற வளாகத்திலும் போலீஸ் வாகனங்களை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இச்சம்பவத்தின் போது, பாதுகாப்புப் பணியில் இருந்த அரசு அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாகவும், அரசு ஊழியர்களை அவர்களின் கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்ததாகவும் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் பதிவான வீடியோ காட்சிகளின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, எம்பி கலாநிதி வீராசாமி உள்ளிட்ட 10 பேர் மீது சென்னை வேப்பேரி காவல் நிலைய போலீசார் முறைப்படி முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து, இந்தச் சம்மனை அனுப்பியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in