கூப்பிட்டுவச்சி அசிங்கப்படுத்துறீங்களா..? 5 தடவை அமைச்சரா இருந்தவன் நான்… மேடையில் சேகர்பாபு-தவெக MLA மோதல்… கூட்டத்தில் பயங்கர சலசலப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கூப்பிட்டுவச்சி அசிங்கப்படுத்துறீங்களா..? 5 தடவை அமைச்சரா இருந்தவன் நான்… மேடையில் சேகர்பாபு-தவெக MLA மோதல்… கூட்டத்தில் பயங்கர சலசலப்பு..!!

Published

on

சென்னையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் அது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, சென்னை மேயர் பிரியா, திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் ராயபுரம் தொகுதி தவெக எம்.எல்.ஏ விஜய் தாமு உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் மைக் பிடித்து சேகர்பாபு மழைக்கால முன்னேற்பாடுகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

அவர் பேசிக் கொண்டிருந்தபோது, அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த தவெக சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு குறுக்கிட்டு, “சீக்கிரம் பேசி முடிங்க, நீங்க பேசுவது Bore அடிக்கிறது” என்று வெளிப்படையாகக் கமெண்ட் அடித்தார். தாமுவின் இந்த விமர்சனத்தால் கடும் டென்ஷன் மற்றும் ஆத்திரமடைந்த சேகர்பாபு, “நான் ஒன்றும் அநாவசியமாகப் பேசவில்லை, மக்களுக்கான பணிகள் குறித்துத்தான் பேசுகிறேன்; அப்படி இருக்கையில் அரசு நிகழ்ச்சிக்கு என்னை முறைப்படி அழைத்துவிட்டு இப்படி அசிங்கப்படுத்துகிறீர்களா? நான் 5 முறை எம்.எல்.ஏ-வாகவும் அமைச்சராகவும் இருந்தவன்” என ஆவேசமாகக் கேள்வி எழுப்பியதால் மேடையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in