LATEST NEWS
“ஆசையா வாங்கிக் கொடுத்த போனை விற்க முயன்ற மனைவி..!” ஆத்திரமடைந்த கவனவன் செய்த காரியத்தை பார்த்து உறைந்து போன கஸ்டமர்கள்.. ஷாப்பிங் சென்டரில் தம்பதியின் மெகா கூத்து.. வைரல் வீடியோ..!!
சீனாவில் கணவர் ஒருவர் தனது மனைவிக்காகத் தவணை முறைத் திட்டத்தில் ஆசையாக ஒரு புதிய செல்போனை வாங்கிக் கொடுத்துள்ள நிலையில், அந்தப் போன் தனக்குப் பிடிக்கவில்லை என்ற காரணத்திற்காக அந்த மனைவி, கணவருக்குத் தெரியாமல் அதனை ரகசியமாக விற்க முயன்ற குடும்பக் கூத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் போனை விற்பனை செய்வதற்காக அங்குள்ள ஒரு பிரம்மாண்ட ஷாப்பிங் மாலுக்குச் சென்றுள்ளார். ஆனால், தனது மனைவி தனக்குத் தெரியாமல் போனை விற்கத் துணிந்த பலே மாஸ்டர் பிளானை அந்தப் கணவர் மிகக் குறுகிய காலத்திலேயே கதிர்வீச்சு வேகத்தில் கண்டுபிடித்து உறைந்துபோயுள்ளார்.
https://twitter.com/nmr2776/status/2092716091529376000/video/1
ஆத்திரமடைந்த கணவர் உடனடியாக அந்த ஷாப்பிங் மாலுக்குத் தனது பைக்கில் விரைந்து சென்று, மனைவியைப் பின் தொடர்ந்து பிடித்துள்ளதோடு, ஒட்டுமொத்தப் பொதுமக்களும் வேடிக்கை பார்க்கும் படி அவளை விசித்திரமான முறையில் கைகளில் தூக்கிக் கொண்டு மாலுக்கு வெளியே அதிரடியாகக் கூட்டிச் சென்றுள்ளார். இந்த சம்பவ வீடியோ சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
