“தலித் மக்களை திராவிட கட்சிகள் பரிதாபமாக பார்ப்பது ஏன்..? வெள்ளை சட்டை போட்டாலே அந்த மாதிரி ஏளனமா பேசுறாங்க… சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னி அரசு ஆவேசம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“தலித் மக்களை திராவிட கட்சிகள் பரிதாபமாக பார்ப்பது ஏன்..? வெள்ளை சட்டை போட்டாலே அந்த மாதிரி ஏளனமா பேசுறாங்க… சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னி அரசு ஆவேசம்..!!

Published

on

சட்டப்பேரவையில் தலித் சமுதாயத்தினர் குறித்து விசிக அமைச்சர் வன்னி அரசு பேசிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தலித் சமுதாயத்தினரை பொதுத் தொகுதியில் நிற்க வைத்தோம் என தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய திராவிட கட்சிகள் பெருமையாகப் பேசுவது, கொள்கை ரீதியானது அல்ல என்றும், அது வெறும் பரிதாபத்தின் அடிப்படையில் மட்டுமே என்றும் அவர் விமர்சித்துள்ளார். கிராமங்களில் தலித் மக்கள் வெள்ளைச் சட்டை அணிந்தாலே, “இவனுக்கு வந்த வாழ்வைப் பாரு” எனப் பேசும் அவல நிலை இன்னும் நீடிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முந்தைய தி.மு.க ஆட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) சார்பில் 4 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பதை அவர் நினைவு கூர்ந்துள்ளார். ஆனால், தற்போதைய தவெக ஆட்சியில் இன்று இரண்டு விசிக எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ள நிலையிலும், தங்களுக்கு அமைச்சரவையில் முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் பெருமையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

பரிதாபத்தின் அடிப்படையில் இல்லாமல், அதிகாரப் பகிர்வு மற்றும் தத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் தலித் மக்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவதே தவெக அரசின் முக்கியக் கொள்கை என்று அமைச்சர் வன்னி அரசு தனது உரையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in