உங்களுக்கு மனசாட்சி இருக்கா…? வரலாறு உங்கள மன்னிக்காது ணே..! அமைச்சர் வன்னி அரசுக்கு வெளிநாட்டுத் தமிழ் மாணவர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உங்களுக்கு மனசாட்சி இருக்கா…? வரலாறு உங்கள மன்னிக்காது ணே..! அமைச்சர் வன்னி அரசுக்கு வெளிநாட்டுத் தமிழ் மாணவர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!

Published

on

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ் கடந்த 5 மாதங்களாக உதவித்தொகை கிடைக்கவில்லை என மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் பிஎச்டி (PhD) பயின்று வரும் தமிழக மாணவர் பாரதிதாசன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தனக்கு வர வேண்டிய கல்வி உதவித்தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் வன்னிஅரசு, உதவித்தொகை வழங்கப்படவில்லை என்பது தவறான தகவல் என்று மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த விளக்கத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மாணவர் பாரதிதாசன் மீண்டும் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “உங்களுக்கு மனசாட்சி இருக்கா? வரலாறு உங்கள மன்னிக்காது ணே..” என்று அமைச்சர் வன்னிஅரசுவின் பெயரைக் குறிப்பிட்டு மிகவும் ஆதங்கத்துடன் பேசியுள்ளார். மேலும், திமுக ஆட்சியில் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் நலனுக்காகக் கொண்டு வரப்பட்ட இந்தச் சிறந்த திட்டத்தை, தற்போதைய அரசு முறையாகச் செயல்படுத்தாமல் தாமதிப்பதாகவும், நிதி கிடைக்காததால் வெளிநாடுகளில் படிக்கும் தங்களைப் போன்ற ஏழை மாணவர்கள் அங்கு வாழ வழியின்றி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in