“உங்க அப்பாகிட்ட கேட்டுப்பாருங்க” நான் சொல்ல ஆரம்பிச்சா உங்களுக்கு நல்லதல்ல.. சட்டமன்றத்தில் திமுகவினருக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆவேச எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“உங்க அப்பாகிட்ட கேட்டுப்பாருங்க” நான் சொல்ல ஆரம்பிச்சா உங்களுக்கு நல்லதல்ல.. சட்டமன்றத்தில் திமுகவினருக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆவேச எச்சரிக்கை..!!

Published

on

சட்டமன்ற மானியக்கோரிக்கை விவாதத்தில், திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் இடையே சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து கடுமையான வாக்குவாதம் நிலவியது. மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் 3 மாதங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, மத்திய அரசை காரணம்காட்டி திமுக அரசு தப்பிக்கக் கூடாது என்று சாடினார்.

இதற்குப் பதில் அளித்த திமுக எம்.எல்.ஏ-வின் பேச்சுக்கு த.வெ.க-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பேச்சு அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகரால் நீக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “2015 முதல் 2021 வரை திமுகவுக்கு உண்மையாகப் பணியாற்றியது உங்கள் தலைவருக்கும், உங்கள் அப்பாவுக்கும் தெரியும்; நான் பழைய கதைகளைச் சொல்ல ஆரம்பித்தால் உங்களுக்கு நல்லதல்ல” என திமுகவினரைப் பார்த்து ஆவேசமாக எச்சரித்தார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in