CRIME
“பெத்த தாயா இவ..?” 2 வயது பிஞ்சுக் குழந்தையின் கழுத்தை பேப்பர் கட்டரால் அறுத்த கொடூரம்… காரணம் கேட்டு அதிர்ந்துபோன போலீஸ்..! ஹரியானாவை உலுக்கிய பகீர் சம்பவம்..!!
ஹரியானாவின் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சிவ என்ஃக்ளேவ் பகுதி 3-ல், 2 வயது சிறுவன் மீது அவனது தாயே பேப்பர் கட்டரால் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளை பராமரிப்பதில் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் கோபத்தின் காரணமாக அந்த பெண் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். பல்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், பல்லா மற்றும் நவீன் நகர் சௌகி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்தப் பெண்ணைக் கைது செய்துள்ளனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, சிவ என்ஃக்ளேவ் பகுதி-3 ஐச் சேர்ந்த கிருஷ்ண குமார் என்பவருக்குக் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கமலேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கிருஷ்ண குமார் மற்றும் அவரது தாய் வேலைக்குச் சென்ற பிறகு, கமலேஷ் குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். ஆகஸ்ட் 26 ஆம் தேதி பிற்பகலில், மூன்று குழந்தைகளையும் தனியாகப் பராமரிப்பதில் ஏற்பட்ட தீவிர மன அழுத்தம் காரணமாக, கோபமடைந்த கமலேஷ் தனது 2 வயது மகனைத் தாக்கியதோடு, வீட்டிலிருந்த பேப்பர் கட்டரைக் கொண்டு அந்தச் சிறுவனின் கழுத்தில் வெட்டியுள்ளார்.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு தந்தை கிருஷ்ண குமார் ஓடிவந்து குழந்தையைக் காப்பாற்ற முயன்றும், அந்தச் சிறுவனுக்குக் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாகச் சிறுவனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர். கிருஷ்ண குமார் அளித்த புகாரின் பேரில், பல்லா காவல் நிலையப் போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, தாய் கமலேஷைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
