“அப்பா, நாங்க வாழ நினைச்சாலும் வாழ முடியாது..!” 3 வயதுக் குழந்தையைத் தவிக்கவிட்டு கோதாவரியில் பாய்ந்த தம்பதியின் கடைசி ஆடியோ.. நடுங்க வைக்கும் பின்ணணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“அப்பா, நாங்க வாழ நினைச்சாலும் வாழ முடியாது..!” 3 வயதுக் குழந்தையைத் தவிக்கவிட்டு கோதாவரியில் பாய்ந்த தம்பதியின் கடைசி ஆடியோ.. நடுங்க வைக்கும் பின்ணணி..!!

Published

on

ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தம்பதியினர் வெளியிட்ட உருக்கமான ஆடியோ பதிவு தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு கோதாவரி மாவட்டத்தின் சிஞ்சினடா பாலத்தில் தங்களது 3 வயதுக் குழந்தையை ஸ்கூட்டரிலேயே தனியாகத் தவிக்கவிட்டு ஆற்றில் குதித்த தோடா வெங்கட சாய் கிருஷ்ணா மற்றும் ஷிரீஷா தம்பதியினர், இந்த விபரீத முடிவை எடுப்பதற்கு முன் தங்களது தந்தைக்குப் பதிவிட்ட அந்த ஆடியோவில், “அப்பா, கவனமாக இருங்கள்… நாங்கள் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் எங்களால் இனி உயிர் பிழைத்து வாழ முடியாது” என்று கண்ணீருடன் தங்களது இறுதி வார்த்தைகளைப் பகிர்ந்துள்ளனர்.

https://twitter.com/TeluguScribe/status/2093241580769735103/video/1

Advertisement

ஹைதராபாத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த சாய் கிருஷ்ணா கடுமையான கடன்களில் சிக்கியதால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பீமவரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குத் தனது குடும்பத்துடன் வந்து தங்கியுள்ளார். இந்தச் சூழ்நிலையில், அவரது நண்பர் ஒருவர் அவரிடம் கொடுத்து அடகு வைக்கச் சொன்ன ஒரு தங்க மோதிரம் விவகாரத்தில், தங்களுக்குக் கடுமையான அச்சுறுத்தல்களும் மன உளைச்சல்களும் ஏற்பட்டதாகச் சாய் கிருஷ்ணா அந்த ஆடியோவில் போட்டுடைத்துள்ளார். 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இந்த இளம் தம்பதியினர், மோதிரப் பிரச்சினையால் ஏற்பட்ட அநாகரிக அராஜகத் துன்புறுத்தல்களைத் தாங்க முடியாமல் தான் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர் என்பது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in