“3 கோடி ரூபாய் கடனாளியானேன்… ஆனாலும் அவளைக் காப்பாற்ற முடியல…!” 8 ஆண்டுகள் மரணத்தோடு போராடிய மனைவி.. கண்கலங்க வைக்கும் கணவனின் பாசப்போராட்டம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“3 கோடி ரூபாய் கடனாளியானேன்… ஆனாலும் அவளைக் காப்பாற்ற முடியல…!” 8 ஆண்டுகள் மரணத்தோடு போராடிய மனைவி.. கண்கலங்க வைக்கும் கணவனின் பாசப்போராட்டம்..!!

Published

on

ஒன்பது வருட காதல், மூன்று கோடி ரூபாய் செலவு, ஆனால் இறுதியில் மிஞ்சியது ஒரு முற்றுப்பெறாத வாழ்க்கைத் கதை. இது ஆக்ராவைச் சேர்ந்த காவலர் பிரியங்கா யாதவ் மற்றும் அவரது கணவர் ஆதேஷ் யாதவின் நெஞ்சை உலுக்கும் காதல் கதை ஆகும். 2014-ல் காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதியின் மகிழ்ச்சியான வாழ்க்கை, ஒரே வருடத்தில் திசைமாறியது. பிரியங்காவிற்கு குழந்தை பிறப்பின் போது ஏற்பட்ட அறுவை சிகிச்சை சிக்கலால் அவரது இதயம் மற்றும் சிறுநீரகங்கள் செயலிழந்து, உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டது.

அடுத்த எட்டு ஆண்டுகள் தன் மனைவியின் உயிரைக் காப்பாற்ற ஆதேஷ் நடத்திய போராட்டம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. டெல்லி அப்பல்லோ, குர்கான் மேதாந்தா என இந்தியாவின் முன்னணி மருத்துவமனைகளுக்கு தன் மனைவியை தூக்கிக்கொண்டு அலைந்தார். கடன்கள் குவிந்த போதும், வறுமை சூழ்ந்த போதும் அவர் நம்பிக்கையை கைவிடவில்லை. தன் மகனின் காதலுக்காக ஆதேஷின் தாயார் தன் ஒரு சிறுநீரகத்தையே பிரியங்காவிற்கு தானமாக வழங்கினார். மனைவியின் சிகிச்சைக்காக சுமார் மூன்று கோடி ரூபாய்க்கும் மேல் செலவழித்து, கடனாளியாக நின்றபோதும் பிரியங்காவின் முன்னால் ஆதேஷ் ஒரு இமயமலை போல் உறுதியோடு நின்றார்.

Advertisement

ஆனால், விதி அவர்களின் போராட்டத்தை மதிக்கவில்லை. கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் 80 நாட்கள் மரணத்தோடு போராடிய பிரியங்கா, தன் கணவனின் கைகளைப் பிடித்தபடியே இறுதி மூச்சை துறந்தார். ஒன்பது வருட காதல், ஒரு தாயின் சிறுநீரகம், மூன்று கோடி ரூபாய் பணம், ஒரு கணவனின் அசைக்க முடியாத நம்பிக்கை என அனைத்தும் மரணத்தின் முன்னால் தோற்றுப்போயின. இது வெறும் ஒரு பெண்ணின் மரணம் அல்ல; தன் மனைவியின் உயிரைக் காக்க இறுதி மூச்சு வரை போராடி, தன் மொத்த வாழ்க்கையையும் இழந்த ஒரு கணவனின் தீராத காதல் காவியம் ஆகும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in