“எனக்கு உடனே கல்யாணம் பண்ணி வைங்க..!” பெற்றோர் மறுத்ததால் 16 வயது மைனர் பையன் எடுத்த விபரீத முடிவு.. நடுங்க வைக்கும் பிண்ணனி..!! – cinefeeds
Connect with us

CRIME

“எனக்கு உடனே கல்யாணம் பண்ணி வைங்க..!” பெற்றோர் மறுத்ததால் 16 வயது மைனர் பையன் எடுத்த விபரீத முடிவு.. நடுங்க வைக்கும் பிண்ணனி..!!

Published

on

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் சிருங்கவரபுகோட்டா மண்டலத்திற்கு உட்பட்ட சீடிபாலம் கிராமத்தில், திருமணத்திற்கு இன்னும் காலம் இருக்கிறது என்று பெற்றோர் அறிவுரை கூறியதால் மனமுடைந்த 16 வயது சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட பதைபதைக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலாம் ஆண்டு இன்டர்மீடியேட் வொகேஷனல் படித்து வந்த நாகா மணிகண்டா என்ற அந்தச் சிறுவன், ஒரு பெண்ணை தீவிரமாகக் காதலித்து வந்துள்ளான். தனக்கு அவளுடன் உடனடியாகத் திருமணம் செய்து வைக்குமாறு தனது பெற்றோரிடம் அவன் தொடர்ந்து வற்புறுத்தி, பாசப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளான்.

“நீ இன்னும் மைனர் பையன் தான், திருமண வயதை எட்டுவதற்கு இன்னும் நிறையக் காலம் இருக்கிறது” என்று அவனது வற்புறுத்தலை நிராகரித்த பெற்றோர், அவனுக்குப் புரிய வைக்க முயன்றுள்ளனர். ஆனால், பெற்றோரின் இந்த அறிவுரையால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான நாகா மணிகண்டா, வீட்டில் யாரும் இல்லாத நள்ளிரவு நேரத்தில் சமையலறை மற்றும் வரவேற்பறைக்கு இடைப்பட்ட பகுதியில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான். தங்களுக்குப் பிடித்த ஆடம்பரப் பொருட்கள் அல்லது ஆசைகள் நிறைவேறாததால் இன்றைய தலைமுறைப் பிள்ளைகள் தற்கொலை போன்ற உடனடி முடிவெடுக்கும் இந்த விபரீத மனநிலை குறித்துப் பொதுவெளியில் கடுமையான விவாதப் புயல் கிளம்பியுள்ளது. இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in