CRIME
“3,000 கோடி ஆன்லைன் மாஃபியாக்களுக்கு விழுந்த மரண மாஸ் வேட்டு..” கோவாவில் நள்ளிரவிலேயே அதிரடி வேட்டை நடத்திய ED அதிகாரிகள்.. உறைந்து போக வைக்கும் பின்னணி..!!
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.3,000 கோடி மதிப்பிலான டிஜிட்டல் கைது உள்ளிட்ட இணையவழி பணமோசடிகள் தொடர்பான வழக்கில், மேலும் 3 பேரை அமலாக்கத்துறைஅதிரடியாகக் கைது செய்துள்ளது. கோவாவின் பனாஜி அமலாக்கத்துறை அலுவலகம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் மூலம், பூஷன் சூர்யகாந்த் மோயே, விலாஸ் நாராயண் பவார் மற்றும் சைலேஷ் தக்து ஆகியோர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளனர். இவர்களைப் பனாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, செப்டம்பர் 1-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இதே வழக்கில் கடந்த ஆகஸ்ட் 23 அன்று மும்பையில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இதுவரை கைதானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள ‘டிஜிட்டல் கைது’ என்பது, மோசடி செய்பவர்கள் அரசு அதிகாரிகளைப் போல நடித்து வீடியோ அழைப்புகள் மூலம் மக்களை மிரட்டும் ஒரு அபாயகரமான இணையவழி குற்றமாகும். பாதிக்கப்பட்டவர்களைச் சிறைபிடித்து வைத்திருப்பது போன்ற போலிச் சூழலை உருவாக்கி, அவர்களை அச்சுறுத்தி இணையவழியில் பணத்தைப் பறிக்கும் இத்தகைய அநாகரிக அராஜக மாஃபியா கும்பலிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இந்தியாவில் டிஜிட்டல் முறையில் யாரையும் கைது செய்யச் சட்டப்பூர்வமாக அனுமதியில்லை என்று தெளிவுபடுத்தியுள்ள அதிகாரிகள், இது போன்ற சைபர் குற்றங்கள் நேர்ந்தால் உடனடியாக 1930 என்ற தேசிய உதவி எண்ணிலோ அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ புகார் அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
