LATEST NEWS
“அமெரிக்காவுக்கு ஒரு பெரிய ‘கும்பிடு’… இந்தியாதான் பெஸ்ட்..!” மினி ஹார்ட் அட்டாக்குக்கு ரூ.22 லட்சம் பில் போட்ட மருத்துவமனை…. மிரண்டு போய் தாய்நாடு திரும்ப முடிவெடுத்த இந்திய இளைஞர்..! வைரல் வீடியோ..!!
அமெரிக்காவில் வசிப்பது மற்றும் டாலர்களில் சம்பாதிப்பது பலரின் கனவாக இருந்தாலும், அங்குள்ள மருத்துவச் சேவை சாமானிய மக்களுக்குப் பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், யுவான் இபானேஸ் என்ற இந்திய இளைஞர் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் மருத்துவக் கட்டணங்களை ஒப்பிட்டுத் தனது கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இச்சம்பவம் இணையத்தில் இரு நாடுகளின் மருத்துவ வசதிகள் குறித்த புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.
அமெரிக்காவில் பாஸ்கட்பால் விளையாடிக் கொண்டிருந்தபோது யுவானுக்கு திடீரெனக் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அங்கு ஆம்புலன்ஸ் சேவைக்கான கட்டணமே ஆயிரக்கணக்கான டாலர்கள் என்பதால், அவரே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகப் படிவங்களை நிரப்பிக் காத்திருந்த பிறகே அவரைப் பரிசோதித்து, அது ‘மினி ஹார்ட் அட்டாக்’ என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இறுதியாக மருத்துவமனை அளித்த பில் தொகையைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்; அதன் மொத்தக் கட்டணம் 23,000 டாலர்கள் ஆகும். அவரிடம் உயர்தர ஹெல்த் இன்சூரன்ஸ் இருந்தபோதிலும், காப்பீட்டுத் தொகை போகத் தனது சொந்தப் பணத்திலிருந்து 7,000 டாலர்களை அவர் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் இந்தியாவில் தனக்கு மயக்கம் ஏற்பட்டபோது, எந்தக் காகிதப் பணிகளுமின்றி உடனடிச் சிகிச்சையும் தனியறையும் கிடைத்தது என்றும், அதன் மொத்தச் செலவே வெறும் 500 டாலர்கள் மட்டும்தான் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
https://www.instagram.com/reel/DcmoIr_zGr6/?utm_source=ig_web_button_share_sheet
அமெரிக்காவின் இந்த அதீத மருத்துவச் செலவு மற்றும் தாமதமான சேவை முறையால் மன உளைச்சலுக்கு ஆளான யுவான், இனி அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்காமல் மீண்டும் இந்தியாவிற்கே திரும்பத் திட்டமிட்டு வருகிறார். அமெரிக்காவில் கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருந்தாலும், மருத்துவக் கட்டணம் எளிய மனிதர்களின் பாக்கெட்டைக் காலி செய்யும் வகையில் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். புனே நகரில் 16 ஆண்டுகள் வசித்த யுவானின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல் பரவி நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
