LATEST NEWS
“தங்கம் வாங்காதீங்க.. வெளிநாட்டுக்கு டூர் போகாதீங்க..!” பிரதமர் மோடி திடீரென இப்படிச் சொல்ல காரணம் என்ன..?! சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு உடைத்த மாபெரும் பொருளாதார ரகசியம்..!!
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வலுவாக உள்ளபோதிலும், தங்கம் வாங்குதல் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் போன்ற செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கோரியுள்ளார். இந்நடவடிக்கை நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்புப் பாதுகாப்பிற்கு அவசியமானது என சோஹோ நிறுவன நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விளக்கமளித்துள்ளார். இந்தியா எரிசக்தி மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களுக்குப் பிற நாடுகளை சார்ந்துள்ளதால், அவசியமற்ற செலவுகள் மூலமாகச் செலவழியும் அந்நியச் செலாவணியைக் கட்டுப்படுத்துவது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கிழக்காசிய நாடுகள் தமது வளர்ச்சிப் பருவத்தில் அந்நியச் செலாவணியைச் சேமிப்பதில் கடுமை காட்டியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா முழுமையான சுயசார்பு அடையும் வரை (இதற்குச் சில தசாப்தங்கள் ஆகலாம்) இந்தச் சேமிப்பு அவசியமானது எனவும் ஸ்ரீதர் வேம்பு தெளிவுபடுத்தியுள்ளார்.
