ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா..? நாளைக்கு தமிழகம் முழுவதும்.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.. தமிழக அரசு அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ரேஷன் கார்டு வச்சிருக்கீங்களா..? நாளைக்கு தமிழகம் முழுவதும்.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.. தமிழக அரசு அறிவிப்பு..!!

Published

on

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் விவரங்களையும் மின்னாளுமை முறையில் விரல்ரேகை மூலம் சரிபார்ப்பதற்கான (eKYC) சிறப்பு முகாம் நாளை (29.08.2026) தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் நடைபெறுகிறது. இதுவரை பல்வேறு காரணங்களால் தங்களின் eKYC பதிவை மேற்கொள்ளாத அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசுத் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்பு முகாம் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை எவ்வித இடைவேளையுமின்றித் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களின் விரல்ரேகையைப் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம் என்பதால், இதுவரை விடுபட்டவர்கள் தங்களுக்குரிய நியாயவிலைக் கடைக்கு நேரில் சென்று தங்களது விவரங்களை உடனடியாகப் புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in