LATEST NEWS
குஷியோ குஷி..! ரேஷன் கார்டு இல்லையென்றாலும் பொருட்கள் வாங்கலாம்… அமைச்சர் வெங்கட்ரமணன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு இல்லாமலும் பொதுமக்கள் தங்களுக்குரிய ரேஷன் பொருட்களை எவ்வித சிரமமுமின்றி வாங்கிக் கொள்ளலாம் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டின் மென்பிரதி அல்லது ரேஷன் கார்டின் அட்டையின் எண்ணைக் கூறி எந்தவொரு கடையிலும் பொதுமக்கள் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
ரேஷன் அட்டை இல்லாத காரணத்தால் பொதுமக்களுக்குப் பொருட்கள் மறுக்கப்படுவதைத் தவிர்க்கவும், இந்தச் சேவையை எளிதாக்கும் வகையிலும் இந்த புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டையை வீட்டில் மறந்துவிட்டு வரும் பயனாளிகள் மற்றும் கார்டை தொலைத்துவிட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
