BREAKING: ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்கவிட்டால் உதவித்தொகை நிறுத்தம்… சற்றுமுன் அதிர்ச்சி அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்கவிட்டால் உதவித்தொகை நிறுத்தம்… சற்றுமுன் அதிர்ச்சி அறிவிப்பு..!!

Published

on

புதுச்சேரியில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இன்னும் இணைக்காத பயனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பண உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும் என புதுச்சேரி அரசின் குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிரடியாக அறிவித்துள்ளது. தற்போதைய ரேஷன் கார்டுதாரர்களின் உண்மைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை முழுமையாக உறுதிப்படுத்துவதற்காகவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ரேஷன் கடைகள் மூலம் நேரடிப் பொருட்களுக்குப் பதிலாக, குடும்ப அட்டைதாரர்களின் தகுதிக்கு ஏற்ப ₹300 மற்றும் ₹600 ஆகிய தொகைகள் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக (DBT முறை) வரவு வைக்கப்பட்டு வருகிறது. எனவே, இந்த நிதியுதவி தொடர்ந்து கிடைக்கப் பெறாதவர்கள் தங்களது ஆதார் விபரங்களை உடனடியாக இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in