எங்கள பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு..? இப்போ வந்தவங்களுக்கு முக்கியப் பதவியா..? தவெக இரண்டாக உடைந்தது.. பெரும் பரபரப்பு..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

எங்கள பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு..? இப்போ வந்தவங்களுக்கு முக்கியப் பதவியா..? தவெக இரண்டாக உடைந்தது.. பெரும் பரபரப்பு..!!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தில் சமீபகாலமாக மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி இணையும் புதிய நிர்வாகிகளுக்கு மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட உயர் மற்றும் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த அதிரடி நடவடிக்கையால், ஆரம்பக்காலம் முதலே கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்த அசல் தவெகவினர் மற்றும் ஆரம்பகாலத் தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் கொதிப்பும் நிலவி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சூழ்நிலையில், தமிழக அரசின் முக்கிய தொழில் மேம்பாட்டு முகமையான ‘ஸ்டார்ட்அப் டிஎன்’ (Startup TN) அமைப்பின் புதிய தலைமைச் செயல் அதிகாரி பதவியை தவெகவினருக்குள் யாருக்குப் பெறுவது என்பதில் தற்பொழுது கடும் போட்டி நிலவி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. முன்னதாக, இதன் தலைமைப் பொறுப்பில் இருந்த சிவராஜா ராமநாதன் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தவெகவினர் இந்த இடத்தைக் கைப்பற்ற ஆர்வம் காட்டி வருகின்றனர்

Advertisement

அதேநேரம், அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனை இந்த முக்கிய தொழில் முகமையின் தலைவராக நியமிக்க கட்சித் தலைமை ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. கல்வி மற்றும் தொழில்நுட்பப் பின்னணி கொண்ட இவருக்கு இந்தப் பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சு பலமாக அடிபடுவதால், கட்சியின் சீனியர்கள் மற்றும் பிற போட்டி நிர்வாகிகளிடையே இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in