BIG NEWS: மக்களே அலர்ட்..! ரேஷன் கடை ஊழியர்கள் உங்கள் வீட்டிற்கே வருகிறார்கள்… ஜூலை 31-க்குள் இதை முடிச்சிடுங்க…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BIG NEWS: மக்களே அலர்ட்..! ரேஷன் கடை ஊழியர்கள் உங்கள் வீட்டிற்கே வருகிறார்கள்… ஜூலை 31-க்குள் இதை முடிச்சிடுங்க…!!

Published

on

தமிழ்நாடு முழுவதும் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டில் உள்ள அனைத்துக் குடும்ப உறுப்பினர்களின் பயோமெட்ரிக் (கைரேகை அல்லது கருவிழி) விவரங்களைப் பதிவுசெய்யும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போலி கார்டுகளை முற்றிலுமாகக் ஒழித்து, உண்மையான பயனாளிகளுக்கு நியாயவிலைப் பொருட்கள் சரியாகச் சென்றடைவதை உறுதிசெய்யவே அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்காக கோவை மாவட்டத்தில் உள்ள 1,523 ரேஷன் கடைகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள 11.25 லட்சம் ஸ்மார்ட் கார்டுகளில், இதுவரை கைரேகை பதிவு செய்யாத சுமார் 3.97 லட்சம் பேரை இலக்காகக் கொண்டு, ஊழியர்கள் நேரடியாக வீடுகளுக்கே சென்று பயோமெட்ரிக் கருவிகள் மூலம் பதிவுகளைச் செய்து வருகின்றனர். இந்த சிறப்பு முயற்சியால் ஒரே வாரத்தில் 60,000-க்கும் மேற்பட்டோரிடம் கைரேகை பெறப்பட்டுள்ளது.

தற்போது கோவை மாவட்டத்தில் அந்தியோதயா அன்ன யோஜனா கார்டுகளில் 95.03 சதவீதமும், முன்னுரிமை கார்டுகளில் 96 சதவீதமும், முன்னுரிமையற்ற கார்டுகளில் 88 சதவீதமும் பயோமெட்ரிக் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள சுமார் 3.40 லட்சம் உறுப்பினர்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணி தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இதே கள ஆய்வின் போது குடும்பங்களில் உயிரிழந்த உறுப்பினர்களின் பெயர்களை உரிய ஆவணங்களுடன் சரிபார்த்து கார்டில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளும் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

இது குறித்து விளக்கமளித்துள்ள ரேஷன் துறை அதிகாரிகள், கைரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் ரேஷன் கார்டில் இருந்து உடனடியாக நீக்கப்படும் என்று அரசு சார்பில் எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளனர். எனினும், திட்டத்தின் முழுமையான பலன்களைப் பெறவும் பதிவுகளை உடனுக்குடன் புதுப்பிக்கவும், வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்கள் பகுதி ரேஷன் கடைகளிலோ அல்லது வீடு தேடி வரும் ஊழியர்களிடமோ தவறாமல் பயோமெட்ரிக் பதிவை நிறைவு செய்ய வேண்டும் என அன்போடு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in