LATEST NEWS
“பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம்” சிக்கலில் சேகர்பாபு.. தவெக அரசின் அடுத்த டார்கெட்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு..!!
கடந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவின்போது, சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சினோரா அசோக் மற்றும் திமுகவினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அப்போது தவெக வேட்பாளர் சினோரா அசோக் தாக்கப்பட்டதாகக் கூறி, திமுக முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வடசென்னை கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சேகர்பாபு தரப்பிலிருந்தும் தவெகவினர் மீது பதில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சினோரா அசோக் அளித்த புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி, கொலை மிரட்டல், சட்டவிரோதமாகக் கூடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தொடர்ச்சியாக, சென்னை போலீசார் முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவை நேரில் வரவழைத்து சுமார் 4 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். அரசியல் வட்டாரத்தில் தவெக அரசு அவரை விரைவில் கைது செய்ய தீவிர முனைப்பு காட்டி வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்த விசாரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
