LATEST NEWS
அம்மா நாங்க பாவம்..! எங்க தப்பை மன்னிச்சு உன் கோபத்தை குறைசிக்கோ.. பாய்ந்து வரும் வெள்ளத்தை நோக்கி கையெடுத்து கும்பிட்டு கண்ணீர் விட்டபெண்… நெஞ்சை உருக்கும் நேபாள வெள்ள வீடியோ வைரல்..!!
நேபாளத்தின் வடக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள மிகக் கொடூரமான வெள்ளப் பெருக்கிற்கு மத்தியில், பெண் ஒருவர் ஆக்ரோஷமாகப் பாய்ந்து வரும் நதியை அமைதிப்படுத்துமாறு கைகூப்பிப் பிரார்த்தனை செய்யும் நெஞ்சை உருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்தப் பயனர்களையும் உருக வைத்துள்ளது. அறிவியல் மற்றும் நவீனத் தொழில்நுட்பங்கள் அனைத்தும் தோற்றுப் போகும் வேளையில், மனிதனின் இறுதி நம்பிக்கையாக மாறக் கூடியது ஆன்மீகமும் இறை நம்பிக்கையும் மட்டுமே என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.
அந்த வைரல் வீடியோவில், வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நதிக்கரையின் ஓரத்தில் ஒரு நேபாளப் பெண்மணி கவலையுடன் நின்றுகொண்டிருக்கிறார். அவரது கையில் மாவால் நிரப்பப்பட்ட ஒரு சிறிய தட்டு உள்ளது. ஆர்ப்பரித்து வரும் நதியின் அலைகளுக்கு மத்தியில், மிக அமைதியான மனதுடன் அந்தப் பெண் நதியை வழிபடுகிறார். கையில் இருக்கும் மாவை நதியில் அர்ப்பணித்து, தரையைத் தொட்டுத் தனது கைகளைக் கூப்பிப் பிரார்த்தனை செய்கிறார். நதியைத் தாயாகக் கருதும் அவர், “எங்கள் பிழைகளை மன்னித்து உன் கோபத்தைக் குறைத்துக்கொண்டு, எல்லோரையும் காப்பாற்று அம்மா” என்று வேண்டுவது போல அந்தத் தத்ரூபக் காட்சிகள் அமைந்துள்ளன.
நெபாளம் – திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு காரணமாக, அங்குள்ள போட்டேகோஷி மற்றும் திரிசூலி ஆகிய நதிகளில் திடீரென வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தத் திடீர் வெள்ளத்தால் வடக்கு நெபாளத்தில் உள்ள பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதுடன், 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இயற்கையின் இந்த ருத்ரதாண்டவத்திற்கு முன்னால் மனிதன் எவ்வளவு சாமானியன் என்பதை இந்த வைரல் வீடியோ பார்ப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் விதமாக விவரித்துள்ளது.
