LATEST NEWS
“கலெக்டர் அங்கிள்… ரோடை சரிபண்ணுங்க” 4 வயது சிறுமியின் ஒரே ஒரு வீடியோ… பார்த்ததும் ஓடோடி வந்த ஆட்சியர் செய்த செயல்.. இணையத்தில் செம வைரல்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஆயிஷா, பள்ளிக்குச் செல்லும் வழியில் இருந்த மோசமான சாலையைப் பார்த்து, “டிஎம் அங்கிள்… தயவுசெய்து எங்கள் வீட்டுச் சாலையைக் கட்டித் தாருங்கள்” என்று பிஞ்சுக் குரலில் கோரிக்கை விடுத்தாள். மழையால் பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு, தண்ணீர் தேங்கி நின்ற அந்தச் சாலையில், “நாங்கள் மூழ்கிக் கொண்டிருக்கிறோம்” என்று அந்தச் சிறுமி வெகுளித்தனமாகக் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த வீடியோ பாராபங்கி மாவட்ட ஆட்சியர் இஷான் பிரதாப் சிங்கின் கவனத்திற்குச் சென்றதும், அவர் உடனடியாகச் செயல்பட்டார். சிறுமியின் நெகிழ்ச்சியான கோரிக்கையை ஏற்று, அந்தப் பகுதியின் நகராட்சி அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவு பிறப்பித்தார். அதிகாரிகளும் விரைந்து வந்து சேதமடைந்த அந்தச் சாலையைச் சீரமைத்து, புதிய சாலை அமைக்கும் பணிகளைத் தொடங்கினர்.
ஒரு சிறிய பெண் குழந்தையின் குரல் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் அசைத்துப் பார்த்த இந்தச் சம்பவம் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அதிகாரிகளின் இந்தத் துரித நடவடிக்கையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதுடன், ஆட்சியரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் பலராலும் நெகிழ்ச்சியுடன் பகிரப்பட்டு வருகிறது.
