அடக்கொடுமையே..! மாமியாரின் கள்ளக்காதல் விவகாரத்தில் தலையிட்ட மாப்பிள்ளைக்குக் கத்திக்குத்து… திரு.வி.க நகரில் நள்ளிரவில் நடந்த பரபரப்பு சம்பவத்தின் பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

அடக்கொடுமையே..! மாமியாரின் கள்ளக்காதல் விவகாரத்தில் தலையிட்ட மாப்பிள்ளைக்குக் கத்திக்குத்து… திரு.வி.க நகரில் நள்ளிரவில் நடந்த பரபரப்பு சம்பவத்தின் பின்னணி..!!

Published

on

சென்னை திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்தவர் விமலா. இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகளுக்கு திருமண ஏற்பாடு நடந்து வருகிறது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு விமலாவிற்கு திரு.வி.க. நகர் சுப்பிரமணி கார்டன் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சேட்டு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக விமலா, சேட்டுவிடம் பேசுவதை தவிர்த்து வந்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சேட்டு, நேற்று இரவு சுமார் 9 மணியளவில் மது போதையில் விமலாவின் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த சத்தம் கேட்டு அப்போது அருகில் இருந்த விமலாவின் மூத்த மகளை திருமணம் செய்ய உள்ள மோனிஷ் என்பவர் அங்கு வந்துள்ளார். அவர் சேட்டுவிடம் சத்தமிடாமல் வீட்டிற்கு செல்லுமாறு கூறிய நிலையில் அதற்கு சேட்டு மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியுள்ளது.

Advertisement

இதையடுத்து, சேட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மோனிஷை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மோனிஷ் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மோனிஷை வெட்டிய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற சேட்டுவை பிடித்த அக்கம்பக்கத்தினர் பிடித்து திரு.வி.க. நகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சேட்டுவை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திரு.வி.க. நகர் போலீசார் சோட்டுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விமலாவுடனான கள்ள காதல் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட தகராறில், அவரது மகளை திருமணம் செய்ய இருந்த இளைஞரை கத்தியால் வெட்டிய சம்பவம் திரு.வி.க. நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in