CRIME
அடக்கடவுளே..! நடுரோட்டில் அரிவாளால் வெட்டப்பட்ட 27 வயது பெண் ஊழியர்.. 2 மாத மரணப் போராட்டத்திற்குப் பின் நடந்த விபரீதம்.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
மகாராஷ்டிர மாநிலம் பால்கரில், கடந்த ஜூன் மாதம் நடுரோட்டில் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்டுப் படுகாயமடைந்த 27 வயது வருவாய்த்துறை பெண் ஊழியர் சினேஹல் சாவந்த், மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வந்த நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த ஜூன் 12, 2026 அன்று, பால்கரில் உள்ள கோல்ட் சினிமா தியேட்டர் அருகே சினேஹல் சாவந்த் நடந்து சென்று கொண்டிருந்த போது, பின்னால் இருந்து வந்த நபர் ஒருவர் சற்றும் எதிர்பாராத விதமாக அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளார். இந்தத் கொடூரத் தாக்குதல் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி ஒட்டுமொத்தப் பொதுவெளியையும் உறைய வைத்தது.
https://twitter.com/MahmudJubaer/status/2092800115228692697/video/1
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர் நீதிமன்ற பியூனாகப் பணிபுரியும் அமோல் முலே என்பதும், அவருக்கும் சினேஹலுக்கும் இடையே இருந்த தனிப்பட்ட நட்பில் ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடு மற்றும் தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதும் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அரிவாள் வெட்டில் தலை மற்றும் உடலில் படுகாயமடைந்த சினேஹல், பால்கரில் முதலுதவி அளிக்கப்பட்டுப் பின்னர் புனேவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவசரமாக மாற்றப்பட்டார். அங்கு இரண்டு மாதங்களுக்கும் மேலாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில்உயிருக்குப் போராடி வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இச்சம்பவம் தொடர்பாகக் குற்றவாளி அமோல் முலேயை பால்கர் போலீஸார் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், தற்போது சினேஹலின் மரணத்தைத் தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு நீதிமன்ற சட்ட நடைமுறைகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.
