“சிக்கினார் தவெக மா.செ..! ரூ.2 கோடி கொடுத்தாதான் சீட்..!” வைரல் ஆடியோவால் கிளம்பிய புயல்..! பேச்சு திரிக்கப்பட்டது என சங்கர் பரபரப்பு விளக்கம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சிக்கினார் தவெக மா.செ..! ரூ.2 கோடி கொடுத்தாதான் சீட்..!” வைரல் ஆடியோவால் கிளம்பிய புயல்..! பேச்சு திரிக்கப்பட்டது என சங்கர் பரபரப்பு விளக்கம்..!!

Published

on

திருப்பூரில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட ரூ.2 கோடி செலவாகும் என தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலாளர் சங்கர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணபதிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பாலசுப்பிரமணியம் என்பவரிடம் சங்கர் தொலைபேசியில் உரையாடியதாகக் கூறப்படும் அந்த ஆடியோவை ஆதாரமாக வைத்து, பாலசுப்பிரமணியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதேவேளையில், தனது உரையாடல் தவறாகச் சித்தரிக்கப்பட்டு, உள்நோக்கத்தோடு திரிக்கப்பட்டு வெளியப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் சங்கர் விளக்கம் அளித்துள்ளார். ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தல் செலவு தொடர்பான இந்த சர்ச்சைக்குரிய ஆடியோ விவகாரம் தற்போது அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in