LATEST NEWS
“ஓராண்டு டைம் கொடுங்க… 120 நாள்ல எதையும் முடிவு பண்ண முடியாது..” CM விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய பிரகாஷ் ராஜ்..!!
பிரகாஷ் ராஜ் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி மற்றும் முதல்வர் விஜய் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் விஜய்க்கு இன்னும் ஓராண்டு காலம் அவகாசம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், விஜய் ஆட்சிக்கு வந்து வெறும் 120 நாள்கள் தான் ஆகிறது என்றும், அவரை மக்கள் தேர்ந்தெடுத்துவிட்டார்கள் என்றும் குறிப்பிட்டார். வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என அனைவருக்கும் அவரே முதலமைச்சர் என்பதால், அவருக்கு இன்னும் கூடுதல் கால அவகாசம் வழங்கிச் செயல்பட வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
