LATEST NEWS
அடக்கொடுமையே… நம்பி வந்த இடத்துல இப்படியொரு துரோகமா…? மனைவியின் 50 லட்சம் பணம் & பாஸ்போர்ட்டை ஆட்டையை போட்டு மாயமான கணவன்..! இந்தியாவில் அனாதையாக நிற்கும் வங்கதேச பெண்..!!
பங்களாதேஷைச் சேர்ந்த லிபி ராணி பால் என்ற பெண், தனது கணவர் டாக்டர் பிரமோத் சக்ரவர்த்தியுடன் இந்தியாவில் உள்ள ஆன்மீகத் தலங்களைத் தரிசிப்பதற்காக வந்துள்ளார். விருந்தாவனத்திற்கு வந்த இடத்தில், தன் கணவர் தன்னிடம் இருந்த ரூ.40 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளுடன் தலைமறைவாகிவிட்டதாக விருந்தாவன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த 2014-இல் தனது முதல் கணவர் கல்லீரல் புற்றுநோயால் இறந்த பிறகு, டாக்காவில் வசித்த பிரமோத்தை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் செப்டம்பர் 8-ஆம் தேதி கொல்கத்தா வழியாக விருந்தாவனத்தை அடைந்து பல்வேறு கோயில்களுக்குச் சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில், செப்டம்பர் 12 அன்று அவசர வேலை இருப்பதாகக் கூறி, லிபி ராணியின் பாஸ்போர்ட் மற்றும் விசாவை எடுத்துக்கொண்டு சென்ற பிரமோத், அதன்பின் திரும்பி வரவில்லை. அவரைத் தொடர்புகொள்ள முயன்றபோதும் பலனளிக்கவில்லை; சிறிது நேரத்தில் அவர் தொலைபேசியையும் அணைத்துவிட்டார். பின்னர் பிரமோத்தின் வாட்ஸ்அப் கணக்கிலிருந்து ஒரு தெரியாத நபர் மூலம் பிரமோத்திற்கு விபத்து நேரிட்டுள்ளதாகச் செய்தி வந்துள்ளது. ஆனால், அவ்விபத்து குறித்த தெளிவான தகவல்களையோ படங்களையோ அந்த நபர் வழங்காததால், தன் கணவர் மீது சந்தேகம் அடைந்த லிபி ராணி செப்டம்பர் 16 அன்று விருந்தாவன் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார்.
தற்போது பாஸ்போர்ட், பணம் மற்றும் நகைகள் அனைத்தும் பறிபோன நிலையில், தங்குவதற்கும் உணவிற்கும் கூடப் போதிய வழியின்றி இந்தியாவில் தனியாகத் தவித்து வரும் அப்பெண், காவல் துறையினரிடம் தனக்கு நியாயம் கிடைக்கவும் தன் கணவரைக் கண்டுபிடிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், உள்ளூர் நிர்வாகத்திடமும் பங்களாதேஷ் அரசிடமும் உதவி கோரியுள்ளார். இப்புகாரின் அடிப்படையில், பெண்ணின் கணவருக்கு உண்மையிலேயே என்ன நேரிட்டது, இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மை மற்றும் பணத் திருட்டு குறித்த புகார்களை காவல் துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
