“முப்பெரும் விழாவா…? இல்ல ஒப்பாரி விழாவா..?” திமுகவை பங்கமாக கலாய்த்த தவெக ஐடி விங்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“முப்பெரும் விழாவா…? இல்ல ஒப்பாரி விழாவா..?” திமுகவை பங்கமாக கலாய்த்த தவெக ஐடி விங்..!!

Published

on

திமுக முப்பெரும் விழாவா, ஒப்பாரி விழாவா என்று தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக தவெக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரறிஞர் அண்ணா பற்றி ஒற்றை வார்த்தைகூட உதிர்க்காத மேடையில், எங்கள் தலைவரின் நடை, உடை, பாவனை பற்றி விரிவாக அலசியிருக்கிறார் கொளத்தூரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்று சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், முதலமைச்சரின் ஒவ்வொரு அசைவுகளையும் வீட்டில் அமர்ந்து நீலாம்பரி போல repeat mode-ல் ஓட்டிப் பார்த்து ரசிக்கும் முன்னாள்… இந்நாள் ரசிகர் என்றும், கொத்துப் பரோட்டா போட்டதற்காக கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவித்தவர், எதற்காக 3 முறை revaluation போட்டார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

அத்துடன், மிசா கைதைப் பற்றி யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று இப்போது சொல்லும் பொய்ப் பிம்பம், 9 நிமிடக் காணொளியை ஏன் வெளியிட்டாராம்? பதற்றம் பற்றியதில் புலம்பிவிட்டாரோ? Detention copy காணாமல் போய்விட்டதோ? என்று விமர்சித்துள்ளது. அன்று “வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா?” என்று வெற்றித் தலைவர் கேட்டபோது, வெற்று வெள்ளைத்தாளைத் தூக்கிக் காண்பித்த மங்காப்புகழ் கொண்ட வரலாறு அவர் ஆட்சியில் தான் நடந்தது என்பதை மறந்தாரோ? என்றும் தவெக ஐடி விங் சாடியுள்ளது. https://x.com/TVKHQITWingOffl/status/2101538421823213974?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2101538421823213974%7Ctwgr%5E8ffe5d801c4e3139bc8d1333d9234337ae410c2a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2Fnews%2Ftamilnadu%2Fdmk-triple-gem-oppari-gem-tvk-it-wing-review

Advertisement

மேலும், image buildup-ற்காக Walking with Harry Potter stick, Mini vlog with Insta kids, cycle ride during foreign visits, monovlog videos என நித்தம் ஒரு விளம்பர shooting நடத்தி வந்த shooting நாயகன், நடிப்பைத் துறந்துவிட்டு மக்கள் பணியாற்ற வந்த நம் வெற்றித் தலைவரைப் பார்த்து “நடிக்கிறார்” என்பது உச்சபட்ச நகைமுரண் என்று குறிப்பிட்டுள்ளது. “ரீல்ஸ் வெறிபிடித்த ஆளுங்கட்சி” என்று ரீல்ஸ்களாக வெளியிட்டு ஒப்பாரி வைக்கிறார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்றும், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்து மீண்டு வாருங்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in