LATEST NEWS
“இது என்னப்பா கூத்து.. 3 குழந்தைகள்… ஆனால் 20 ஆண்டுகள் பேசாத கணவன்… மனைவி கேட்ட அந்த ஒரு வார்த்தையால் நடந்த நெகிழ்ச்சி காரியம்.. நெட்டிசன்களை வியக்க வைத்த சம்பவம்..!!
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட சிறிய வாக்குவாதம் காரணமாக, அவரிடம் தொடர்ந்து 20 ஆண்டுகள் ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனம் காத்த விசித்திரமான சம்பவம் இணையத்தில் பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தம்பதியினர் அதே 20 ஆண்டுகளில் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து, மூன்று குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கியுள்ளனர்; ஆனால், கணவர் தனது மனைவியுடன் மட்டும் ஒருமுறை கூட பேசவே இல்லை. இறுதியாக, 20 வருட மௌனப் போராட்டத்திற்குப் பிறகு அவரது மனைவி அவரிடம் மன்னிப்பு கேட்க, அந்த அடுத்த நொடியே இந்த நீண்ட கால மௌனம் உடைந்து இருவரும் பேசத் தொடங்கினர்.
ஒரு சிறிய சண்டைக்காக 20 வருடங்கள் ஒருவரோடு ஒருவர் பேசாமல் இருப்பதை உங்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடிகிறதா? இந்த நீண்ட கால மௌனத்திற்கு அந்த நபரின் அதீத ஈகோ தான் காரணமா அல்லது திருமண வாழ்க்கையில் அமைதியைத் தேடி அவர் எடுத்த ‘மோட்ச’ வழிமுறையா என்ற கேள்வியோடு இந்தத் தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்துத் திருமணமானவர்களும், இன்னும் திருமணமாகாதவர்களும் தங்களின் கருத்துக்களை இணையத்தின் கமெண்ட் பாக்ஸ்களில் சுவாரசியமாகப் பகிர்ந்து விவாதித்து வருகின்றனர்.
