LATEST NEWS
நடப்பது தவெக ஆட்சியா..? திமுகவின் நீட்சியா..? என்.எல்.சி விரிவாக்கத்திற்கு எதிராக அன்புமணியின் காரசார X பதிவு..!!
கடலூர் சிப்காட் மற்றும் என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காகக் கூடுதல் நிலங்களைக் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பிற்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள X பதிவில், சிப்காட் மற்றும் என்.எல்.சி திட்டங்களுக்காகத் தங்களின் விவசாய நிலங்களை இழக்கும் பொதுமக்கள், இறுதியில் சொந்த மண்ணிலேயே கூலிகளாக மாறும் நிலை ஏற்படும் என்று மிகக் காரசாரமாகச் சாடியுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் தற்போது நடப்பது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியா அல்லது முந்தைய திமுகவின் நீட்சியா என்று பொதுமக்கள் பெரும் அச்சத்திலும் குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த நிலக்கையகப்படுத்தும் அறிவிப்பை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
