CRIME
“10 வருட காதல் திருமணம் இப்படி ஒரு முடிவா..?” குளியலறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண் ஆசிரியை.. கணவர் செய்த வெறிச்செயல்… உ.பி.யை உலுக்கிய திடுக்கிடும் சம்பவம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் பதக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் திலீப்புக்கும், தனியார் பள்ளி ஆசிரியையான ஷாலினிக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இதனிடையே, கடந்த சில மாதங்களாகக் கணவன்-மனைவி இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடு காரணமாகத் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்த சூழலில், ஷாலினி தனது வீட்டில் உள்ள குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் ஷாலினியின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், ஷாலினியின் கணவர் திலீப் மற்றும் அவரது சகோதரர்கள் பூபேந்திரா, சந்தீப் ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தங்களது மகளை அவரது கணவரும் அவரது சகோதரர்களும் சேர்ந்து திட்டமிட்டுக் கொலை செய்துவிட்டதாக ஷாலினியின் பெற்றோர் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், தம்பதியிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு கொலையில் முடிந்ததா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
