“அடடே!… நடுராத்திரி 12 மணிக்கு கூட போயி ரேஷன் அரிசி வாங்கலாமா?!… க்யூவுல நிக்கவே தேவையில்ல… சத்தீஸ்கரில் களமிறங்கிய லேட்டஸ்ட் ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அடடே!… நடுராத்திரி 12 மணிக்கு கூட போயி ரேஷன் அரிசி வாங்கலாமா?!… க்யூவுல நிக்கவே தேவையில்ல… சத்தீஸ்கரில் களமிறங்கிய லேட்டஸ்ட் ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’..!!”

Published

on

சத்தீஸ்கர் மாநிலத்தில் பொதுமக்கள் 24 மணி நேரமும் ரேஷன் அரிசி வாங்குவதற்கு வசதியாக, வங்கி ஏடிஎம் போல செயல்படும் ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘அன்னபூர்த்தி கிரெயின் ஏடிஎம்’ என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம், அம்மாநிலத் தலைநகர் ராய்ப்பூரின் பிர்கான் பகுதியில் தொடங்கப்பட்டது. இதன் மூலம் பயனாளிகள் எந்த நேரத்திலும் தங்களுக்கான மாதாந்திர ரேஷன் அரிசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த ஏடிஎம் இயந்திரத்தைப் பயன்படுத்த ரேஷன் கார்டை எடுத்துச் சென்று ஸ்கேன் செய்ய வேண்டும். ஸ்கேன் செய்தவுடன் ரேஷனில் உள்ள இயந்திரத்தில் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் காட்டப்படும். அதில் பயனாளியின் பெயரைத் தேர்வு செய்து கைரேகையைப் பதிவு செய்ததும் இயந்திரமே அதைச் சரிபார்த்துவிடும். சரிபார்ப்பிற்குப் பின் உணவுப்பொருட்களைத் தேர்வு செய்தால், அது துல்லியமாக அளந்து விநியோகிக்கும். இதனால் எடையைக் குறைத்து அளப்பது உள்ளிட்ட மனிதத் தவறுகளுக்கு வாய்ப்பே இல்லை.

Advertisement

இந்த ஏடிஎம் இயந்திரம் சுமார் 2,500 கிலோ அரிசியைச் சேமித்து வைக்கும் திறன் கொண்டது. அரிசியை இயந்திரத்தில் நிரப்புவதும், பயனாளிகளுக்கு விநியோகிப்பதும் முழுமையாகத் தானியங்கி முறையில் நடைபெறுகிறது. சத்தீஸ்கரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு உலக உணவுத் திட்டம் ஆதரவு அளித்து வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in